பி.ஏ.பி., நீர் திறப்புக்கு முன் துார்வாருங்க! வேலை உறுதி திட்டத்தில் மேற்கொள்ள கோரிக்கை

Added : நவ 24, 2022 | |
Advertisement
உடுமலை:பி.ஏ.பி., பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில், அரணி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு துார்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெற்று, அடுத்த மாதம், மூன்றாம் மண்டல

உடுமலை:பி.ஏ.பி., பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில், அரணி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு துார்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:

பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெற்று, அடுத்த மாதம், மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்புள்ளது. அரசிடமிருந்து, கால்வாய் பராமரிப்புக்கு நிதி வருவதில்லை.

எனவே, இரண்டாம் மண்டல பாசனத்திற்குட்பட்ட அரணி வாய்க்கால்களை, வேலை உறுதி திட்ட பணியாளர்களைக்கொண்டு, துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், அரணி வாய்க்கால்கள் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை இணைந்து, அரணிவாய்க்கால்களை மீட்க வேண்டும். அதே போல், உடுமலை கால்வாயில், கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதிகளில், நேரடியாக கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

நீர் நிலைகள், நீர் வழித்தடங்களை குறி வைத்து, கேரளாவிலிருந்து மருத்துவக்கழிவுகள், இறைச்சி கழிவுகள், உள்ளூர் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

குடிமங்கலம் பகுதிகளில், தடுப்பணைகள் கட்டியதில், பெரும் முறைகேடு நடந்துள்ளது. உரிய ஆய்வு, நிலமட்டம் கணக்கிடாமல் கட்டப்பட்டதால், விவசாய நிலங்கள் பாதித்துள்ளன.

பூளவாடி, மேட்டுப்பாளையம் கிராமத்தில், இரு ஆண்டுக்கு முன், பாலம் கட்ட தோண்டப்பட்டது. ஒதுக்கிய, 27 லட்சம் ரூபாயில், 80 சதவீதம் நிதி எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாலத்திற்கு ஆரம்ப கட்ட பணிகள் கூட நடக்கவில்லை. இதனால், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் வழித்தடம் இல்லாமல், பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிதி முறைகேடு குறித்து விசாரணையும், பாலத்தை கட்டவும் நடவடிக்கை வேண்டும்.


கரும்பு அபிவிருத்தி திட்டம்



அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதி விவசாயிகளுக்கு, மானியம் வழங்கும் வகையில், கரும்பு அபிவிருத்தி திட்டத்திற்கு, 12.64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முறையாக விவசாயிகளுக்கு வழங்க, எந்த விதமான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை பயன்படுத்த அரசு அனுமதியளித்துள்ளது.

ஆனால், கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், போடிபட்டி, குறிஞ்சேரி, குரல்குட்டை என பெரும்பாலான ஊராட்சிகளில், பெரிய விவசாயிகள் மட்டுமே முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


உரக்கடைகளில் கண்காணிப்பு அவசியம்



உரக்கடைகளில், விவசாயிகளுக்கு தெரியாத பெயரில், ஏராளமான உரம், மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு, எதை, எதற்கு அடிக்க வேண்டும் என தெரியாமல் விற்பனை செய்யப்படுகிறது.

வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பயிர்களுக்கு உரிய உரம், மருந்து பரிந்துரை செய்யாத நிலையில், தேவையற்ற மருந்துகள், ஏராளமான பொருட்செலவில் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய உரம், மருந்து வழங்கவும், நமது பகுதிக்கு தேவையற்ற இடுபொருட்கள் இருப்பு வைப்பதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X