ஏரியில் மீன் பாசி குத்தகை 3வது முறை ஏலத்தில் தீர்வு

Added : நவ 24, 2022 | |
Advertisement
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பழையனுார் ஊராட்சிக்குட்பட்டது புலவநல்லுார் ஏரி மற்றும் வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கணேசபுரம் ஏரி. இந்த இரண்டு ஏரியும், நீர்வள துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த ஏரிகளை மீன் பாசி குத்தகைக்கு ஏலம் விட, ஆறு மாதத்திற்கு முன், நீர்வளத் துறையால் தீர்மானிக்கப்பட்டு, உதவி கோட்ட பொறியாளர் கவுரி சங்கர் தலைமையில் அந்தந்த

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பழையனுார் ஊராட்சிக்குட்பட்டது புலவநல்லுார் ஏரி மற்றும் வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கணேசபுரம் ஏரி.

இந்த இரண்டு ஏரியும், நீர்வள துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த ஏரிகளை மீன் பாசி குத்தகைக்கு ஏலம் விட, ஆறு மாதத்திற்கு முன், நீர்வளத் துறையால் தீர்மானிக்கப்பட்டு, உதவி கோட்ட பொறியாளர் கவுரி சங்கர் தலைமையில் அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் நடந்தது.

அப்போது ஏலம் கேட்க வந்த இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, தற்காலிகமாக தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைத்த நிலையில், கடந்த 16ம் தேதி மீண்டும் ஏலம் நடக்க இருப்பதாக நீர்வளத் துறை பொறியாளரால் அறிவிக்கப்பட்டது.

அன்றைய தினம், மழை காரணமாக இரண்டாவது முறையாக ஏலம் தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று, மூன்றாவது முறையாக ஏலம் விடப்பட்டது.இதில், புலவநல்லுார் ஏரியின் குறைந்தபட்ச ஏலத்தொகையாக 5,000மும், கணேசபுரம் ஏரியின் குறைந்தபட்ச தொகையாக 10 ஆயிரமும் வைக்கப்பட்டது.

இதில், புலவநல்லுார் ஏரி 11 ஆயிரம் ரூபாய்க்கும், கணேசபுரம் ஏரி 27 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது. மூன்றாவது முறையாக விடப்பட்ட ஏலத்தில் தீர்வு காணப்பட்டதால் நீர்வளத் துறை அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X