துாய்மையில்லாத பொது கழிப்பிடம் புகார் அளிக்க 'க்யூ ஆர்' கோடு

Added : நவ 24, 2022 | |
Advertisement
உடுமலை:பொதுக்கழிப்பிடம் துாய்மையாக இல்லாவிட்டால், அங்கு ஒட்டப்பட்டுள்ள 'க்யூ ஆர்' கோடு பயன்படுத்தி, புகாரை உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு இனி கொண்டு செல்ல முடியும்.துாய்மை இந்தியா திட்டத்தில், சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதன்படி, பிரத்யேக 'மொபைல் ஆப்' உருவாக்கப்பட்டுள்ளது.சுகாதாரம் சார்ந்து, உள்ளாட்சி நிர்வாகத்தினரின்

உடுமலை:பொதுக்கழிப்பிடம் துாய்மையாக இல்லாவிட்டால், அங்கு ஒட்டப்பட்டுள்ள 'க்யூ ஆர்' கோடு பயன்படுத்தி, புகாரை உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு இனி கொண்டு செல்ல முடியும்.

துாய்மை இந்தியா திட்டத்தில், சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதன்படி, பிரத்யேக 'மொபைல் ஆப்' உருவாக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் சார்ந்து, உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பணிகள் இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், பொதுக்கழிப்பிடங்களில் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், 'க்யூ ஆர் கோடு' உதவியுடன் 'மொபைல் போன்' வாயிலாக புகார் செய்யும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, துாய்மை இந்தியா திட்ட இணைய தள செயலியுடன் இணைக்கப்பட்ட 'க்யூ ஆர் கோடு', பொதுக் கழிப்பிடங்களில் முகப்பில் வைக்கப்படும்.

பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பது, சுகாதாரம் மற்றும் தண்ணீர், விளக்கு வசதி இல்லாமல் இருப்பது போன்ற குறைகளை, தங்கள் மொபைல் போனில், 'க்யூ ஆர்' கோடு ஸ்கேன் செய்வதன் வாயிலாக, துாய்மை இந்தியா திட்ட இணையதள செயலியில் அது பதிவாகிவிடும்.

அந்த தகவல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

அடுத்த ஆறு மணி நேரத்தில் குறை நிவர்த்தி செய்யப்படும் வகையில், இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சிகள் அளவில் இத்திட்டத்தை வேகப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு பொதுக் கழிப்பிடத்திலும் துாய்மை இந்தியா திட்டத்துடன் இணைந்த 'க்யூ ஆர் கோடு' வைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X