கோவில் மடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், சரவணபொய்கை குளம் செல்லும் வழியில், முருகன் கோவிலுக்கு சொந்தமான மடம் உள்ளது. இங்கு ஏழு ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.அங்கன்வாடி மையத்திற்கு இதுவரை சொந்த கட்டடம் இல்லாததால், கோவில் மடத்தில் குறுகிய இடத்தில் இயங்கி வருகிறது.இங்கு குழந்தைகளுக்கு போதிய அடிப்படை
 கோவில் மடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், சரவணபொய்கை குளம் செல்லும் வழியில், முருகன் கோவிலுக்கு சொந்தமான மடம் உள்ளது. இங்கு ஏழு ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

அங்கன்வாடி மையத்திற்கு இதுவரை சொந்த கட்டடம் இல்லாததால், கோவில் மடத்தில் குறுகிய இடத்தில் இயங்கி வருகிறது.

இங்கு குழந்தைகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

அந்த மடத்தில் மின் விசிறி மற்றும் சமையல் செய்வதற்கு போதிய அறை வசதியில்லாததால், குறுகிய இடத்தில் உணவு தயாரிக்கின்றனர்.

இதுதவிர குழந்தைகள் விளையாடுவதற்கு போதிய இடவசதியும் இல்லை. சொந்தமாக அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டித் தருமாறு மடம் கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.

எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், உடனடியாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு இடவசதி மற்றும் நிதி ஓதுக்கீடு செய்து தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X