ஆஞ்சநேயர் சன்னிதி அமைக்க பூமி பூஜை

Added : நவ 24, 2022 | |
Advertisement
பொன்னேரி:பொன்னேரி அடுத்த, தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் லட்சுமியம்மன் கோவில் உள்ளது. இங்கு மகாலட்சுமி, லட்சுமி நாராயணன், மஹா கணபதி, உமா மகேஸ்வரி, வைஷ்ணவி, வராஹி அம்மன், விஷ்ணு துர்கை, நவக்கிரஹகம் ஆகிய சன்னதிகள் உள்ளன.தற்போது கோவிலின் முகப்பில், ஐந்து அடி பீடம், 15 அடி உயர ஆஞ்சநேயர் சிலையுடன், சன்னதி அமைக்க பக்தர்களால் திட்டமிடப்பட்டு, அதற்கான பூமி பூஜை நேற்று
 ஆஞ்சநேயர் சன்னிதி அமைக்க பூமி பூஜை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் லட்சுமியம்மன் கோவில் உள்ளது. இங்கு மகாலட்சுமி, லட்சுமி நாராயணன், மஹா கணபதி, உமா மகேஸ்வரி, வைஷ்ணவி, வராஹி அம்மன், விஷ்ணு துர்கை, நவக்கிரஹகம் ஆகிய சன்னதிகள் உள்ளன.

தற்போது கோவிலின் முகப்பில், ஐந்து அடி பீடம், 15 அடி உயர ஆஞ்சநேயர் சிலையுடன், சன்னதி அமைக்க பக்தர்களால் திட்டமிடப்பட்டு, அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

கோவில் அர்ச்சகர் மந்திரங்கள் ஓதி, அடிகற்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தீபாராதனைகள் காட்டினார்.

தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அடிகற்களை வைத்து பூமி பூஜை செய்து வழிபட்டனர்.

ஆஞ்சநேயர் சன்னிதி மூன்று மாதங்களுக்குள் முடித்து, கும்பாபிஷேகம் நடத்த உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X