ஜல் சக்தி அபியான் திட்ட பணிகள்: கிராமங்களில் மத்திய குழுவினர் ஆய்வு

Added : நவ 24, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில், நீராதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான பணிகளை மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் குழுவினர் ஆய்வு செய்தனர்.ஜல்சக்தி அபியான் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசு ஒரு குழு அமைத்துள்ளது.இக்குழுவினர், நேற்று, உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.அவ்வகையில், மத்திய கலாசார துறை இயக்குனர்

உடுமலை:உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில், நீராதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான பணிகளை மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஜல்சக்தி அபியான் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசு ஒரு குழு அமைத்துள்ளது.

இக்குழுவினர், நேற்று, உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அவ்வகையில், மத்திய கலாசார துறை இயக்குனர் அரவிந்த்குமார், புனே ஆராய்ச்சி நிறுவன தொழில்நுட்ப விஞ்ஞானி சமந்த்சிங் ஆகியோர் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளை பார்வையிட்டனர். பின்னர், நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தடுப்பணைகள், பயனுள்ள வகையில் உள்ளதா என ஆய்வு செய்தனர்.

அப்போது, மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்பட வேண்டும்; நிலத்தடி நீர் செறிவூட்டல் அடைவதை கண்காணிக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் கலந்துரையாடினர். நுாறு நாள் வேலை திட்டத்தின் பயன்கள்; வாரத்திற்கு எத்தனை நாட்கள் வேலை வழங்கப்படுகிறது; ஒரு நாள் வேலைக்கான கூலி ஆகிய விபரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து, போடிப்பட்டி 'நர்சரி' யில், உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள், நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (நுாறு நாள் வேலை திட்டம்) சுமதி, பி.டி.ஓ., கந்தசாமி, ஒன்றியப்பொறியாளர்கள் சுப்ரமணியம், கலைச்செல்வி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X