அலுவலர்கள் விடுப்பு போராட்டம் இரண்டாவது நாளாக பணிகள் பாதிப்பு

Added : நவ 24, 2022 | |
Advertisement
அன்னுார்:ஊரக வளர்ச்சித் துறை வேலை நிறுத்தத்தால், இரண்டாவது நாளாக நேற்றும் ஒன்றிய அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.ஊரக வளர்ச்சித் துறையில், விடுமுறை தின ஆய்வு, இரவு நேர ஆய்வு ஆகியவற்றை கைவிட வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் வாயிலாக சம்பளம் வழங்க வேண்டும், பதவி உயர்வு ஆணைகளை தாமதம் இல்லாமல் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று
 அலுவலர்கள் விடுப்பு போராட்டம் இரண்டாவது நாளாக பணிகள் பாதிப்பு

அன்னுார்:ஊரக வளர்ச்சித் துறை வேலை நிறுத்தத்தால், இரண்டாவது நாளாக நேற்றும் ஒன்றிய அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஊரக வளர்ச்சித் துறையில், விடுமுறை தின ஆய்வு, இரவு நேர ஆய்வு ஆகியவற்றை கைவிட வேண்டும்.

ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் வாயிலாக சம்பளம் வழங்க வேண்டும், பதவி உயர்வு ஆணைகளை தாமதம் இல்லாமல் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஒட்டுமொத்த விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்தது.

இதன்படி இரண்டாவது நாளாக நேற்றும் ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன, கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தம் உள்ள ஊழியர்களில், 335 பேர் பணிக்கு வந்திருந்தனர், 159 பேர் விடுமுறை எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 14 பேரும், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், 22 பேரும், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், 19 பேரும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஒன்பது பேரும், சூலுார் ஒன்றியத்தில் ஆறு பேரும் நேற்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இரண்டாவது நாளாக நேற்றும் பணிகள் பாதிக்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X