காட்சிப்பொருளான கட்டடங்கள் வீணாகும் சேவை மையங்கள்

Added : நவ 24, 2022 | |
Advertisement
உடுமலை;கிராமங்களில் பயன்பாடு இல்லாமல், காட்சிப்பொருளாக உள்ள, சேவை மைய கட்டடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது வருவாய்த்துறை சம்பந்தமான சான்றிதழ்களை, மக்கள் சிரமமின்றி பெறுவதற்கு இ- சேவை மையங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.கிராமப்புற மக்கள், வருவாய்த்துறை, வேளாண்துறை உட்பட பல அரசுத்துறை திட்டங்கள், மானியங்கள் பெற,

உடுமலை;கிராமங்களில் பயன்பாடு இல்லாமல், காட்சிப்பொருளாக உள்ள, சேவை மைய கட்டடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது வருவாய்த்துறை சம்பந்தமான சான்றிதழ்களை, மக்கள் சிரமமின்றி பெறுவதற்கு இ- சேவை மையங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

கிராமப்புற மக்கள், வருவாய்த்துறை, வேளாண்துறை உட்பட பல அரசுத்துறை திட்டங்கள், மானியங்கள் பெற, போதியளவு இ-சேவை மையங்கள் இல்லாமல், பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நகரிலுள்ள மையங்களில், நீண்டநேரம் காத்திருந்து, விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், இச்சேவைகளை கிராமப்புறங்களில், பெற, கட்டப்பட்ட சேவை மைய கட்டடங்கள் பயன்பாடு இல்லாமல், காட்சிப்பொருளாக உள்ளது.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய ஊராட்சிகளில், பெரும்பாலான கிராம சேவை மைய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல், வீணாகி வருகிறது. சில கட்டடங்கள் மாற்றுப்பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

கிராம மக்கள் கூறியதாவது:

அரசுத்துறை சார்ந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக நகரங்களுக்குச்செல்ல வேண்டியுள்ளது.

கிராமங்களில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், தலா, 14 லட்ச ரூபாய், ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஊரக வளர்ச்சி துறை மூலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

அக்கட்டடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். அதில், அரசுத்துறை சார்ந்த அனைத்து வகை சேவைகளையும் வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X