பென்ஷன் தொகை நிறுத்தி வைப்பு

Added : நவ 24, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்;ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்குபென்ஷன் தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பென்ஷனர்கள் அவதிப்படுகின்றனர்.காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 120 சத்துணவு மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும், அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என, மூவர் பணியில் உள்ளனர். இந்த மையங்களில் பணியாற்றிய, 180க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாதம், 2 ஆயிரம் ரூபாய்

மேட்டுப்பாளையம்;ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்குபென்ஷன் தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பென்ஷனர்கள் அவதிப்படுகின்றனர்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 120 சத்துணவு மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும், அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என, மூவர் பணியில் உள்ளனர்.

இந்த மையங்களில் பணியாற்றிய, 180க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாதம், 2 ஆயிரம் ரூபாய் 'பென்ஷன்' வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அக்., மாதத்துக்கான 'பென்ஷன்' இன்னும் வழங்கவில்லை. அதனால் ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்கள் கூறுகையில்,'காரமடை ஊராட்சி ஒன்றிய சத்துணவு மையங்களில் பணியாற்றி, 2020ம் ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்கு, இன்னும் சேம நலநிதியும், வருங்கால வைப்பு நிதியும் வழங்கப்படவில்லை. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களில், பெரும்பாலானவர்கள் நோய்வாய்ப்பட்டு, மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு இந்த 'பென்ஷன்' தொகை மிகவும் உதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில் அக்., மாத 'பென்ஷன்' தொகை, நவ., 25ம் தேதியாகியும் இன்னும் வழங்கவில்லை. எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து, பென்ஷன் தொகை வழங்க வேண்டும்,' என்றனர். இதுகுறித்து காரமடை பி.டி.ஓ., பாக்கியலட்சுமி கூறுகையில்,"ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு, பென்ஷன் தொகை, கருவூலம் வாயிலாக வழங்கப்பட்டு வந்தது. அதை தற்போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து தருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

அதனால் 'பென்ஷன்' தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தவுடன் வழங்கப்படும்," என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X