சூலுாரில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு பயிற்சி

Added : நவ 24, 2022 | |
Advertisement
சூலுார்:சூலுார் அரசு பள்ளி தொழிற்கல்வி மாணவர்கள், தனியார் தொழிற்சாலையில் பயிற்சிபெற்றனர்.சூலுார் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி மாணவர்களுக்கான நேரடி உள்ளுறை பயிற்சி முத்துக்கவுண்டன் புதூர் 'சிரா இன்ஜினிரியரிங்' கம்பெனியில் அளிக்கப்பட்டது. இதில், 19 மாணவர்கள் பங்கேற்றனர். இயந்திரங்களை இயக்கும் முறை, கம்ப்யூட்டரில் புரோகிராம் செய்யும் முறைகள் குறித்து
 சூலுாரில்  தொழிற்கல்வி மாணவர்களுக்கு பயிற்சி

சூலுார்:சூலுார் அரசு பள்ளி தொழிற்கல்வி மாணவர்கள், தனியார் தொழிற்சாலையில் பயிற்சிபெற்றனர்.

சூலுார் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி மாணவர்களுக்கான நேரடி உள்ளுறை பயிற்சி முத்துக்கவுண்டன் புதூர் 'சிரா இன்ஜினிரியரிங்' கம்பெனியில் அளிக்கப்பட்டது. இதில், 19 மாணவர்கள் பங்கேற்றனர். இயந்திரங்களை இயக்கும் முறை, கம்ப்யூட்டரில் புரோகிராம் செய்யும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

லேசர் கட்டிங், துளையிடும் இயந்திரம், பெண்டிங் மெஷின், ஜிக்ஸ் மற்றும் பிக்சர்ஸ் வெல்டிங் வகைகள், நுணுக்கமான கைக்கருவிகளை கையாளும் முறை குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு, நிறுவனத்தினர் விளக்கம் அளித்தனர். ஆசிரியர்கள் தங்கவேல், பாலமுருகன் ஆகியோர் மாணவர்களை வழிநடத்தினர்.

தொழிற்கல்வி ஆசிரியர் கதிர்வேல் ஏற்பாடுகளை செய்திருந்தார். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X