திருத்தணியில் புதிய பஸ் நிலையம் கட்டும் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி பேருந்து நிலையத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், நகராட்சி நிர்வாகம், 12.75 கோடி ரூபாய் மதிப்பில், அரக்கோணம் சாலை அரசு போக்குவரத்து பணிமனை அருகே புதிய நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.இந்நிலையில், பேருந்து நிலையம் கட்டும் இடத்தில் எம்.ஜி.ஆர்., நகர் புதிய வண்ணார் தெருவைச் சேர்ந்த தனி நபர்

திருத்தணி:திருத்தணி பேருந்து நிலையத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், நகராட்சி நிர்வாகம், 12.75 கோடி ரூபாய் மதிப்பில், அரக்கோணம் சாலை அரசு போக்குவரத்து பணிமனை அருகே புதிய நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பேருந்து நிலையம் கட்டும் இடத்தில் எம்.ஜி.ஆர்., நகர் புதிய வண்ணார் தெருவைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், 300 சதுரடி நிலம் ஆக்கிரமித்து வீட்டை கட்டியிருந்தார்.

ஆக்கிரமிப்பு அகற்றுமாறு நகராட்சி நிர்வாகம் பலமுறை தனி நபருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும் அகற்றாமல் மெத்தனம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று, திருத்தணி நகராட்சி ஆணையர் ராமஜெயம், பொறியாளர் கோபு, நகர வடிவமைப்பாளர் தயாநிதி மற்றும் நகராட்சி ஊழியர்கள், 30க்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று தனி நபர் ஆக்கிரமித்த இடத்தை அதிரடியாக மீட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X