டோல்கேட்டில் மழை நீர் தேக்கம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
சோழவரம்:சோழவரம் அடுத்த விஜயநல்லுார் பகுதியில், சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை டோல்கேட் அமைந்து உள்ளது. இங்கு வாகனங்கள் சென்று வரும்போது கட்டணம் வசூலிப்பதற்காக, இருபுறமும், 14 கவுன்டர்கள் உள்ளன.தொடர்ந்து பெய்து வரும் மழையால், கவுன்டர்கள் அமைந்துள்ள பகுதி முழுதும், மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது. மழை விட்டாலும், பல நாட்கள் மழை நீர் செல்ல வழியின்றி
 டோல்கேட்டில் மழை நீர் தேக்கம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சோழவரம்:சோழவரம் அடுத்த விஜயநல்லுார் பகுதியில், சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை டோல்கேட் அமைந்து உள்ளது. இங்கு வாகனங்கள் சென்று வரும்போது கட்டணம் வசூலிப்பதற்காக, இருபுறமும், 14 கவுன்டர்கள் உள்ளன.

தொடர்ந்து பெய்து வரும் மழையால், கவுன்டர்கள் அமைந்துள்ள பகுதி முழுதும், மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது. மழை விட்டாலும், பல நாட்கள் மழை நீர் செல்ல வழியின்றி கிடக்கிறது.

தேங்கிய மழை நீரில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். இருசக்கர வாகன ஒட்டிகள் தடுமாற்றம் அடைந்து விழுகின்றனர்.

சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இந்த டோல்கேட்டை கடந்து செல்கின்றன.

தினமும் பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூல் செய்யும் டோல்கேட் நிர்வாகம், அங்கு தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

டோல்கேட் பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X