5 டன் பிளாஸ்டிக் பறிமுதல் குடோனுக்கு 'சீல்' வைப்பு

Added : நவ 24, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை நகராட்சி பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட கேரிபேக், கவர், டம்ளர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கண்காணிப்பு குழு அமைத்து, இரு நாட்களாக, நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர்.நேற்று, உடுமலை நகராட்சி பகுதியில், திருப்பூர் தெற்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும்

உடுமலை:உடுமலை நகராட்சி பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட கேரிபேக், கவர், டம்ளர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கண்காணிப்பு குழு அமைத்து, இரு நாட்களாக, நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று, உடுமலை நகராட்சி பகுதியில், திருப்பூர் தெற்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், பொள்ளாச்சி ரோட்டிலுள்ள குடோனில், மிகப்பெரிய அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு வைத்து, நகர பகுதி முழுவதும் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, குடோனில் பதுக்கி வைத்திருந்த, சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பிலான, ஐந்து டன் பிளாஸ்டிக் டம்ளர்கள், கேரி பேக்குகள், மேஜை விரிப்புகள், பிளாஸ்டிக் ஸ்பூன் என தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குடோனுக்கு, சீல் வைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X