கட்டட அனுமதி: 'ஆன்லைன்' பதிவில் சிக்கல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை :கட்டுமான திட்ட அனுமதி விண்ணப்பங்களை, புதிதாக அறிமுகமாகி உள்ள ஒற்றை சாளர 'ஆன்லைன்' நடைமுறையில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பொது கட்டட விதிகளின் அடிப்படையில் அதிக உயரம் இல்லாத அடுக்குமாடி கட்டடங்கள், அதிக உயரமான அடுக்குமாடி கட்டடங்கள் என்ற இரண்டு பிரிவில், கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை பெருநகரில், இதற்கான பணிகளை


சென்னை :கட்டுமான திட்ட அனுமதி விண்ணப்பங்களை, புதிதாக அறிமுகமாகி உள்ள ஒற்றை சாளர 'ஆன்லைன்' நடைமுறையில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பொது கட்டட விதிகளின் அடிப்படையில் அதிக உயரம் இல்லாத அடுக்குமாடி கட்டடங்கள், அதிக உயரமான அடுக்குமாடி கட்டடங்கள் என்ற இரண்டு பிரிவில், கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை பெருநகரில், இதற்கான பணிகளை சி.எம்.டி.ஏ., மேற்கொள்கிறது.

இதற்காக, 2017ல் ஏற்படுத்தப்பட்ட ஆன்லைன் திட்ட இணையதளம் புதுப்பிக்கப்பட்டு, ஒற்றை சாளர முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

கட்டுமான திட்ட அனுமதி விண்ணப்பம் மற்றும் இணைப்பு ஆவணங்கள், வரைபடம் ஆகியவற்றை ஆன்லைன் முறையிலேயே உள்ளீடு செய்ய வேண்டும். கடந்த மே மாதம் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

ஆனால், இதற்கான இணையதளத்தில் காணப்படும் தொழில்நுட்ப பிரச்னைகளால், கட்டுமான அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:

கடந்த மே, 10ல் இத்திட்டம் துவங்கப்பட்டாலும் இதில் விண்ணப்பங்கள் பதிவு மற்றும் பரிசீலனை நிலையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. இதுவரை, பதிவு, பரிசீலனை முடிந்த, 300 விண்ணப்பங்களில், 30க்கும் குறைவான திட்டங்களுக்கே ஒப்புதல் கிடைத்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 529 கட்டுமான திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

இதில், 218 விண்ணப்பங்கள் சி.எம்.டி.ஏ., தரப்பு காரணங்களாலும், 345 விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர் தரப்பு காரணங்களாலும் நிலுவையில் உள்ளன.

மேலும், விண்ணப்பிக்கும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, 100 விண்ணப்பங்கள் பதிவு முடியாமல் காத்திருக்கின்றன. சி.எம்.டி.ஏ., வழிகாட்டுதல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வரைபடங்களை உள்ளீடு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

தொலைபேசி வழியே இதற்கு உதவ, சில ஏற்பாடுகளை சி.எம்.டி.ஏ., மேற்கொண்டாலும், இதில் ஆரம்ப நிலையில் காணப்படும் சிக்கல் தொடர்கிறது. வீட்டுவசதி துறை உயரதிகாரிகள், அமைச்சர் வரை இது குறித்த புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறுகள் ஓரிரு வாரங்களில் சரி செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்தால், 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு திட்டங்களில் கட்டுமான பணிகள், விற்பனை துவங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X