திருப்பூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்குவது அவசியம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
கூடுதல் பஸ் இயக்கணும்உடுமலையிலிருந்து திருப்பூர் செல்லும் பஸ்களில், காலை, 7:30 முதல் 8:50 மணி வரையிலும், மாலையில் 5:30 முதல் இரவு, 7:30 மணி வரையிலும், பஸ்களில் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டியதுள்ளது. அந்நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கனகராஜ், உடுமலை. தெருநாய்கள் தொல்லைஉடுமலை, அருகே போடிபட்டி சூர்யா கார்டன்
 திருப்பூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்குவது அவசியம்


கூடுதல் பஸ் இயக்கணும்



உடுமலையிலிருந்து திருப்பூர் செல்லும் பஸ்களில், காலை, 7:30 முதல் 8:50 மணி வரையிலும், மாலையில் 5:30 முதல் இரவு, 7:30 மணி வரையிலும், பஸ்களில் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டியதுள்ளது. அந்நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கனகராஜ், உடுமலை.


தெருநாய்கள் தொல்லை



உடுமலை, அருகே போடிபட்டி சூர்யா கார்டன் பகுதியில், தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. சில சமயங்களில் ரோட்டில் செல்வோரை விரட்டிச்சென்று தாக்குகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

- சிவக்குமார், உடுமலை.


மேம்பாலம் வேண்டும்



உடுமலை - கொழுமம் ரோடு ரயில்வே கேட் ஒருநாளைக்கு, 8 முறை ரயில் செல்வதற்காக மூடப்படுகிறது. கேட் திறந்தவுடன் நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அங்கு மேம்பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செல்வநாயகம், உடுமலை.


பள்ளம் சீரமைக்கணும்



உடுமலை, தளி ரோடு மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதையில், பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதில் செல்லும் வாகன ஓட்டுனர்கள கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அந்த பள்ளத்தை சரிசெய்ய நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகன், உடுமலை.


போக்குவரத்து நெரிசல்



உடுமலை, பைபாஸ் ரோட்டில், பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இவற்றால், அந்த ரோட்டில் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கதிரேசன், உடுமலை.


கரையில் குப்பை



உடுமலை, கிருஷ்ணாபுரத்தில் அமராவதி பிரதான கால்வாய் செல்கிறது. இதன் கரையில் குப்பை, கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. தண்ணீரும் மாசடைய வாய்ப்புள்ளது. இந்த கழிவுகளை பேரூராட்சியினர் அகற்ற வேண்டும்.

- கோவிந்தராஜ், உடுமலை.


தெருவிளக்கு அமைங்க



கொமரலிங்கம் அமராவதி ஆற்றுப்பாலத்தில், தெருவிளக்குகள், ஒளிபிரதி பலிப்பான் இல்லை. இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகின்றனர். பேரூராட்சியினர் பாலத்தில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

- சுப்புராஜ், உடுமலை.


செயல்படாத கருவி



உடுமலை, ரயில்வே ஸ்டேஷனில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால், அங்கு வரும் ரயில் பயணியர் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். எனவே அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜோசப், உடுமலை.


பாதையை சரிசெய்யணும்



திருமூர்த்திமலை கோவிலிலிருந்து, பஞ்சலிங்கம் அருவிக்கு செல்லும் பாதை கரடு, முரடாக காணப்படுகிறது. இதில் செல்லும் சுற்றுலா பயணியர், முதியவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அங்குள்ள பாதையை வனத்துறையினர் சீரமைக்க வேண்டும்.

- முருகராஜ், உடுமலை.


நிழற்கூரை வேண்டும்



உடுமலை எஸ்.வி. புரத்தில் இருந்த நிழற்கூரை அகற்றப்பட்டது. பின்னர் நிழற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால், மக்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு புதிதாக நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சாந்தி, உடுமலை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X