வள்ளலாரின் பிறந்த நாள் அன்னதான திட்டம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
திருத்தணி:ஹிந்து சமய அறநிலைத் துறையின் சார்பில், வள்ளலாரின் தருமசாலை துவக்கிய 156வது ஆண்டு தொடக்கம் மற்றும் வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற, 200வது ஆண்டு துவக்கம் மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த, 152வது ஆண்டு ஆகிய முப்பெரும் விழாவையொட்டி, முக்கிய நகரங்களில் நாள்தோறும் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.அந்த வகையில் நேற்று, திருத்தணி முருகன் கோவில் சார்பில்,
 வள்ளலாரின் பிறந்த நாள் அன்னதான திட்டம்

திருத்தணி:ஹிந்து சமய அறநிலைத் துறையின் சார்பில், வள்ளலாரின் தருமசாலை துவக்கிய 156வது ஆண்டு தொடக்கம் மற்றும் வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற, 200வது ஆண்டு துவக்கம் மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த, 152வது ஆண்டு ஆகிய முப்பெரும் விழாவையொட்டி, முக்கிய நகரங்களில் நாள்தோறும் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.

அந்த வகையில் நேற்று, திருத்தணி முருகன் கோவில் சார்பில், சன்னதி தெருவில் உள்ள தணிகேசன் மண்டபத்தில் நான்கு நாட்களுக்கு முழுநேரம் அன்னதான திட்டம் துவக்க விழா கோவில் துணை ஆணையர் விஜயா தலைமையில் நடந்தது.

இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், தாசில்தார் வெண்ணிலா, நகராட்சி தலைவர் சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று வள்ளலார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து தீபாராதனை நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து எம்,எல்.ஏ., அன்னதான திட்டத்தை துவங்கி வைத்தார். நாள் முழுதும், வரும் 27ம் தேதி வரை நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X