கனமழையால் காலிபிளவர் பாதிப்பு: இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
உடுமலை:கனமழையால், பாதித்த காலிபிளவர் சாகுபடிக்கு நிவாரணம் வழங்க கோரி, குடிமங்கலம் வட்டார விவசாயிகள், வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.குடிமங்கலம் வட்டாரம், சனுப்பட்டி, வல்லக்குண்டாபுரம் பகுதியில், கிணற்று பாசனத்துக்கு, காலிபிளவர் பரவலாக சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில், பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த காலிபிளவர் நீரில்
 கனமழையால் காலிபிளவர் பாதிப்பு: இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

உடுமலை:கனமழையால், பாதித்த காலிபிளவர் சாகுபடிக்கு நிவாரணம் வழங்க கோரி, குடிமங்கலம் வட்டார விவசாயிகள், வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

குடிமங்கலம் வட்டாரம், சனுப்பட்டி, வல்லக்குண்டாபுரம் பகுதியில், கிணற்று பாசனத்துக்கு, காலிபிளவர் பரவலாக சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில், பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த காலிபிளவர் நீரில் மூழ்கி, அழுகியது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம் கூறுகையில், ''நடப்பு சீசனில், 2.5 ஏக்கரில், 40 ஆயிரம் காலிபிளவர் செடிகள் நடவு செய்து பராமரித்து வந்தேன். இச்சாகுபடிக்கு மட்டும், 2 லட்ச ரூபாய்க்கு அதிகமாக செலவிட்டுள்ளேன்.

இந்நிலையில், அறுவடை செய்ய, 5 நாட்கள் மட்டும் இருந்த நிலையில், ஒரே நாளில், பெய்த கனமழையால், காலிபிளவர் செடிகள் முற்றிலுமாக அழுகி விட்டது. சாகுபடி செலவிட்ட தொகை முழுவதும் நஷ்டமாகியுள்ளது.

இது குறித்து வருவாய்த்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினரிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை,'' என்றார்.

இந்நிலையில், குடிமங்கலம் வட்டாரத்தில், கனமழையால், காலிபிளவர் சாகுபடியில், பாதிப்பை சந்தித்த விவசாயிகள், அரசு இழப்பீடு வழங்க கோரி, நேற்று உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X