தொழிற்சாலையில் மாமூல் கேட்ட தி.மு.க., நிர்வாகிக்கு 'கம்பி'

Added : நவ 24, 2022 | |
Advertisement
கீழச்சேரி :திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு, கீழ்நல்லாத்துாரைச் சேர்ந்த பிரபு, 42, என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இந்த தொழிற்சாலைக்குச் சென்ற, கீழச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் தேவிகலாவின் மகனும், கடம்பத்துார் தி.மு.க., ஒன்றிய பொருளாளருமான தேவா, 33, என்பவர், 10 லட்சம் ரூபாய்
 தொழிற்சாலையில் மாமூல் கேட்ட தி.மு.க., நிர்வாகிக்கு 'கம்பி'

கீழச்சேரி :திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு, கீழ்நல்லாத்துாரைச் சேர்ந்த பிரபு, 42, என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இந்த தொழிற்சாலைக்குச் சென்ற, கீழச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் தேவிகலாவின் மகனும், கடம்பத்துார் தி.மு.க., ஒன்றிய பொருளாளருமான தேவா, 33, என்பவர், 10 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு உள்ளார்.

அத்துடன், தொழிற்சாலையில் கழிவுப் பொருட்கள் எடுக்க ஒப்பந்தம் வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி உள்ளார். மறுத்தால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், தொழிற்சாலைக்கு வாகனங்கள் செல்ல முடியாதபடி, சாலையையும் சேதப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து, தொழிற்சாலை மேலாளர் பிரபு அளித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் நேற்று காலை தேவாவை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

தேவா மீது கொலை முயற்சி, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக, மப்பேடு போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X