மது குடித்தால் மலட்டுத்தன்மை விழிப்புணர்வு பிரசாரத்தில் தகவல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
அன்னுார்:'மது அருந்துவதால் மலட்டுத்தன்மை ஏற்படும்,' என அன்னுாரில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் தெரிவிக்கப்பட்டது.கலால்துறை சார்பில், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி அன்னுார் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. சிவகங்கையை சேர்ந்த கலைக்குழுவினர் பாட்டு பாடி, நடனமாடி, விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.கலைஞர்கள் நடத்திய நாடகம்
 மது குடித்தால் மலட்டுத்தன்மை விழிப்புணர்வு பிரசாரத்தில் தகவல்

அன்னுார்:'மது அருந்துவதால் மலட்டுத்தன்மை ஏற்படும்,' என அன்னுாரில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

கலால்துறை சார்பில், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி அன்னுார் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. சிவகங்கையை சேர்ந்த கலைக்குழுவினர் பாட்டு பாடி, நடனமாடி, விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

கலைஞர்கள் நடத்திய நாடகம் வாயிலாக,'மது அருந்துவதாலும், போதை பொருட்கள் உட்கொள்வதாலும் துாக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம், இருதய வீக்கம், மலட்டுத்தன்மை ஆகியவை ஏற்படும். கண் பார்வை மங்கும். மூளையையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்க செய்து சோர்வடைய செய்யும். கல்லீரல் பாதிக்கப்படும். மாரடைப்பால் திடீர் மரணம் ஏற்படும். எனவே மது மற்றும் போதைப் பொருளிலிருந்து விலகி நிற்போம். நம் குடும்பத்தை காப்போம்' என, பிரசாரம் செய்தனர்.

கலால் துறை தாசில்தார் விமலா, வி.ஏ.ஓ., அறிவுடை நம்பி ஆகியோர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து பொகலுார் பஸ் ஸ்டாப்பிலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X