பாதுகாப்பின்றி கட்டடம் இடிப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை, ஓ.எம்.ஆர்., என்ற பழைய மாமல்லபுரம் சாலை, 20 கி.மீ., நீளம் உடைய, ஆறு வழி பாதை. 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், நெரிசலில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும்.இந்த சாலையின், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன், ஒரு மால் கட்டப்பட்டது. இந்த இடத்தை வேறு பயன்பாட்டிற்காக மாற்ற, அதை முழுதுமாக இடிக்கும் பணி துவங்கிஉள்ளது.நவீன இயந்திரங்களை பயன்படுத்தி, கட்டடம்
 பாதுகாப்பின்றி கட்டடம் இடிப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சென்னை, ஓ.எம்.ஆர்., என்ற பழைய மாமல்லபுரம் சாலை, 20 கி.மீ., நீளம் உடைய, ஆறு வழி பாதை. 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், நெரிசலில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும்.

இந்த சாலையின், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன், ஒரு மால் கட்டப்பட்டது. இந்த இடத்தை வேறு பயன்பாட்டிற்காக மாற்ற, அதை முழுதுமாக இடிக்கும் பணி துவங்கிஉள்ளது.

நவீன இயந்திரங்களை பயன்படுத்தி, கட்டடம் தகர்க்கப்படுகிறது. இதனால் வெளியேறும் துாசி, காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் கண்ணில் விழுகிறது. இதனால், சில வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.

எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் கட்டடம் இடிக்கப்படுகிறது. பிரதான சாலையை ஒட்டி கட்டடம் உள்ளதால், துாசி சாலையில் செல்லாத வகையில், தடுப்பு அமைத்து இடிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X