ஜல்லடையான்பேட்டை ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்பார்ப்பு

Added : நவ 24, 2022 | |
Advertisement
தென் சென்னையில் சதுப்பு நிலப் பகுதியை ஒட்டியுள்ள ஏரிகளில், ஜல்லடையான்பேட்டை ஏரியும் ஒன்று. 50 ஆண்டுகளுக்கு முன், 150 ஏக்கர் பரப்பில் இருந்தது.பெரும்பாக்கம், ஜல்லடையான்பேட்டை, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் விவசாய பாசனத்திற்கும், நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கவும், இது தான் ஆதாரம்.குறிப்பாக, கடல் நீர் உட்புகாமல் தடுக்கும் வகையில், இந்த ஏரியின் அமைப்பு உள்ளது.
 ஜல்லடையான்பேட்டை ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்பார்ப்பு

தென் சென்னையில் சதுப்பு நிலப் பகுதியை ஒட்டியுள்ள ஏரிகளில், ஜல்லடையான்பேட்டை ஏரியும் ஒன்று. 50 ஆண்டுகளுக்கு முன், 150 ஏக்கர் பரப்பில் இருந்தது.

பெரும்பாக்கம், ஜல்லடையான்பேட்டை, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் விவசாய பாசனத்திற்கும், நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கவும், இது தான் ஆதாரம்.

குறிப்பாக, கடல் நீர் உட்புகாமல் தடுக்கும் வகையில், இந்த ஏரியின் அமைப்பு உள்ளது. ஜல்லடியான்பேட்டை ஏரியின் கரை மட்டும், 1,458 மீட்டர் நீளத்துடன் இருக்கிறது.

தாம்பரம் - -வேளச்சேரி சாலை, பழைய மாமல்லபுரம் இணைப்பு சாலை வரை பரந்து விரிந்திருந்த இந்த ஏரி, 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, ஆக்கிரமிப்பாளர்களின் கொடூர கரங்களில் சிக்கியது.

அதன் விளைவாக 30 ஏக்கருக்கும் குறைவாகவே உள்ளது. தவிர, ஏரியில் நீர் சேருவதற்கு, ஆகாய தாமரைகள் தடையாக இருந்தன.

இந்நிலையில், பொதுப்பணித் துறை சார்பில், ஏரியில் உள்ள ஆகாய தாமரைகள் அகற்றும் பணி துவக்கப்பட்டது. தொடர் மழையால், ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து, பணிகள் தடைபட்டது.

பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழை காரணமாக நிறுத்தப்பட்ட பணிகள், மீண்டும் துவக்கப்பட்டு, ஏரியில் ஆகாய தாமரைகள் முழுமையாக அகற்றப்படும்' என்றனர்.

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள், 'மற்ற ஏரிகளைபோல, ஜல்லடையன் ஏரியின் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்ற வேண்டும். கரைகளை பலப்படுத்தி நடைபாதை அமைக்க வேண்டும்' என்றனர்.

- -நமது நிருபர்- -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X