கஞ்சா வியாபாரிக்கு வலை சிக்கியதோ '‛ஹவாலா' பணம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
அம்பத்துார், அம்பத்துார் மதுவிலக்கு போலீசார், நேற்று காலை, அம்பத்துார் ரயில் நிலையத்தில், கஞ்சா விற்போரை தேடி வந்தனர்.அங்கு, சந்தேகத்திற்கிடமாக, கையில் பையுடன் இருந்தவர், ரயிலில் பெரம்பூருக்கு சென்றார். அவருடன் தொடர்பில் உள்ள மற்ற வியாபாரிகளையும் சேர்த்து பிடிக்க, போலீசார், அவரை பின் தொடர்ந்தனர்.பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி, சில நிமிடம் காத்திருந்த மர்ம நபர்,



அம்பத்துார், அம்பத்துார் மதுவிலக்கு போலீசார், நேற்று காலை, அம்பத்துார் ரயில் நிலையத்தில், கஞ்சா விற்போரை தேடி வந்தனர்.

அங்கு, சந்தேகத்திற்கிடமாக, கையில் பையுடன் இருந்தவர், ரயிலில் பெரம்பூருக்கு சென்றார். அவருடன் தொடர்பில் உள்ள மற்ற வியாபாரிகளையும் சேர்த்து பிடிக்க, போலீசார், அவரை பின் தொடர்ந்தனர்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி, சில நிமிடம் காத்திருந்த மர்ம நபர், போலீசாரை பார்த்து தப்பிக்க முயன்றனர்.

போலீசார், அவரை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த பையை சோதனையிட்டனர். அதில், 89 லட்சம் ரூபாய் இருந்தது. விசாரணையில் அவர், புரசைவாக்கத்தைச் சேர்ந்த அபிஷேக், 40, என்பது தெரிந்தது. அந்த பணத்திற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரையும், பணத்தையும், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகளிடம், போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து அவர்கள், அபிஷேக்கிடம் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X