சாலையில் திரியும் மாடுகள் திருவல்லிக்கேணியில் அவதி

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை, :திருவல்லிக்கேணி பகுதியில், இரவு ஆனாலும் இருப்பிடம் செல்லாமல் மாடுகள் சுற்றித் திரிவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் அருகே உள்ள, ராகவேந்திரா கோவில் காய்கறி மார்க்கெட் அருகே மாடுகள் சுற்றித் திரிகின்றன.காலையில் வரும் மாடுகள், அங்கு கொட்டப்படும் காய்கறி கழிவுகளை உண்ணுகின்றன. பின், இரவு இங்கேயே தங்கி விடுகின்றன.
 சாலையில் திரியும் மாடுகள் திருவல்லிக்கேணியில் அவதி

சென்னை, :திருவல்லிக்கேணி பகுதியில், இரவு ஆனாலும் இருப்பிடம் செல்லாமல் மாடுகள் சுற்றித் திரிவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் அருகே உள்ள, ராகவேந்திரா கோவில் காய்கறி மார்க்கெட் அருகே மாடுகள் சுற்றித் திரிகின்றன.

காலையில் வரும் மாடுகள், அங்கு கொட்டப்படும் காய்கறி கழிவுகளை உண்ணுகின்றன. பின், இரவு இங்கேயே தங்கி விடுகின்றன. இவற்றைத் தேடி உரிமையாளர்களும் வருவதில்லை. பொதுவாக மேய்ச்சலுக்கு வரும் மாடுகள், மாலை நேரங்களில் அதன் இருப்பிடத்துக்கு சென்றுவிடும். ஆனால் இந்த மாடுகள் செல்வதில்லை.

இதனால் காலை, மாலை நேரங்களில் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், மாடுகளைக் கண்டு அச்சப்படுகின்றனர்.

இதுகுறிப்பு அப்பகுதி மக்கள் கூறும் போது, 'மாடுகள் குறித்து செய்தி வெளியாகும் போது, மாநகராட்சி அதிகாரிகள் இரு நாட்களுக்கு நடவடிக்கை எடுக்கின்றனர். மீண்டும் மாடுகள் அதே இடத்திற்கு வந்து விடுகின்றன. உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதித்தால் தான், இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X