மேம்பாலம் ஓரத்தில் தற்காலிக தடுப்பு கண் துடைப்புக்கு அதிகாரிகள் சாகசம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
வாலாஜாபாத்:வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில், வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதுதவிர, தனியார் தொழிற்சாலை வாகனங்கள் ஏராளமாக செல்கிறது.மேம்பாலத்தின் மீது வாகனங்கள் கடந்து செல்லும் போது, கவிழ்ந்து விடக்கூடாது என, இருபுறமும் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர்.கடந்த ஆண்டு, வாலாஜாபாத் பழைய வட்டார வளர்ச்சி
 மேம்பாலம் ஓரத்தில் தற்காலிக தடுப்பு கண் துடைப்புக்கு அதிகாரிகள் சாகசம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில், வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதுதவிர, தனியார் தொழிற்சாலை வாகனங்கள் ஏராளமாக செல்கிறது.

மேம்பாலத்தின் மீது வாகனங்கள் கடந்து செல்லும் போது, கவிழ்ந்து விடக்கூடாது என, இருபுறமும் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர்.

கடந்த ஆண்டு, வாலாஜாபாத் பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு செல்லும் மார்க்கமாக, டிப்பர் லாரி கவிழ்ந்து இரும்பிலான தடுப்பு சேதம் ஏற்பட்டது. அதன் பின் தடுப்பு அமைக்கவில்லை.

இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறையினர் மணல் மூட்டைகளை சாலை ஓரத்தில் ஆங்காங்கே அடுக்கி, கொம்பு நட்டுள்ளனர். இது, பாதுகாப்பு இன்றி காணப்படுகிறது. இது, நெடுஞ்சாலைத் துறையினர் கண் துடைப்பிற்கு போட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே, வாலாஜாபாத் ரயில் மேம்பாலத்தித்தின் ஓரம் இரும்பிலான தடுப்பு கம்பிகளை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X