அரசு 'ஏசி' பேருந்தில் திடீர் தீ விபத்து

Added : நவ 24, 2022 | |
Advertisement
தாம்பரம்,தாம்பரம் அருகே, அரசு குளிர்சாதன பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தாம்பரம் போக்குவரத்து பணிமனையில் இயங்கி வரும் தடம் எண் '21ஜி' குளிர்சாதன பேருந்து, நேற்று மதியம் சென்னை பிராட்வேயில் இருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு, ஜி.எஸ்.டி., சாலை வழியாக தாம்பரம் நோக்கிச் சென்றது. தாம்பரம், சானடோரியம் பேருந்து நிலையத்தில் பயணியரை

தாம்பரம்,தாம்பரம் அருகே, அரசு குளிர்சாதன பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம் போக்குவரத்து பணிமனையில் இயங்கி வரும் தடம் எண் '21ஜி' குளிர்சாதன பேருந்து, நேற்று மதியம் சென்னை பிராட்வேயில் இருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு, ஜி.எஸ்.டி., சாலை வழியாக தாம்பரம் நோக்கிச் சென்றது. தாம்பரம், சானடோரியம் பேருந்து நிலையத்தில் பயணியரை இறக்கியவுடன், பேருந்து புறப்பட்டது.

தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகே சென்ற போது, பேருந்தின் கூரையில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

இதை கவனித்த பயணியர் சத்தமிட்டதால், ஓட்டுனர் முத்து பேருந்தை ஜி.எஸ்.டி., சாலை ஓரம் நிறுத்தினார். சற்று நேரத்தில், பயணியர் அனைவரும் கீழே இறங்கி ஓடினர்.

அவ்வழியாக வந்த வாகனங்களும் நிறுத்தப்பட்டதால், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்த போது, ஓட்டுனர் பேருந்தை பணிமனைக்கு எடுத்துச் சென்றார். இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X