நீர் வெளியேறும் பாதை ஆக்கிரமிப்பு கோவிலை வெள்ளம் சூழ்வதால் அவதி

Added : நவ 24, 2022 | |
Advertisement
வேளச்சேரி, வேளச்சேரியில், கருணாம்பிகை உடனுறை தண்டீஸ்வரர் கோவில், ௧,௦௦௦ ஆண்டுகள் பழமையானது. இது, சாலை மட்டத்தில் இருந்து, 3 அடி பள்ளத்தில் உள்ளது.கோவிலை ஒட்டி, 60 சென்ட் பரப்பில், 25 அடி ஆழத்தில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தின் மையத்தில் 20 அடி ஆழத்தில் கிணறு தோண்டப்பட்டுள்ளது.மழையின் போது, இந்த குளம் நிரம்பி வழிந்தால், இரு மோட்டார்கள் வைத்து, 'பம்ப்' செய்து, அங்குள்ள
 நீர் வெளியேறும் பாதை ஆக்கிரமிப்பு கோவிலை வெள்ளம் சூழ்வதால் அவதி



வேளச்சேரி, வேளச்சேரியில், கருணாம்பிகை உடனுறை தண்டீஸ்வரர் கோவில், ௧,௦௦௦ ஆண்டுகள் பழமையானது. இது, சாலை மட்டத்தில் இருந்து, 3 அடி பள்ளத்தில் உள்ளது.

கோவிலை ஒட்டி, 60 சென்ட் பரப்பில், 25 அடி ஆழத்தில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தின் மையத்தில் 20 அடி ஆழத்தில் கிணறு தோண்டப்பட்டுள்ளது.

மழையின் போது, இந்த குளம் நிரம்பி வழிந்தால், இரு மோட்டார்கள் வைத்து, 'பம்ப்' செய்து, அங்குள்ள கால்வாயில் தண்ணீர் விடப்படுகிறது.

ஆனால், கால்வாய் தொடர்ச்சியாக இல்லாததால், தண்டீஸ்வரர் நகர், சீதாபதி நகரில், தெருக்களில் தண்ணீர் தேங்குகிறது. மழை நின்றாலும், 10 நாட்கள் வரை, கோவில் வளாகத்தில் நீர் தேங்குகிறது.

குளம் நிரம்பினால், உபரி நீர் வேளச்சேரி ஏரியை சென்றடையும்.

சில ஆண்டுகளுக்கு முன், நீரோட்ட பாதை ஆக்கிரமிப்பில் சிக்கியதால், குளம் நிரம்பும் போது கோவிலில் நீரூற்று அதிகரித்து, பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

இதனால், குளம் நிரம்பி வெளியேறும் உபரிநீரை, ஏரியில் வடிய செய்யும் வகையில், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, தண்டீஸ்வரர் திருவருட் சங்க நிர்வாகி குமாரராஜா, 61, கூறுகையில்,''குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர், வடிகால் வழியாக ஏரியை அடையும் வகையில், கட்டமைப்பு அமைக்க வேண்டும்.

அதுவும், வடிகாலில் செல்லும் கழிவு நீர், குளத்திற்கு திரும்பாத வகையில், வால்வு அமைத்து கட்டமைக்க வேண்டும்.

இதை, மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X