பொது வாலிபரிடம் பணம் பறிப்பு ஊர்க்காவல் படை வீரர் கைது

Added : நவ 24, 2022 | |
Advertisement
எழும்பூர் :அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி, மறைமலை அடிகள் தெருவைச் சேர்ந்தவர் கேசவன், 24; அண்ணா சாலையில் மோட்டார் கம்பெனியில் பணிபுரிகிறார்.இவர் நேற்று முன்தினம் மாலை, எழும்பூர் எத்திராஜ் சாலையிலுள்ள டீ கடையில் நின்று சிகரெட் பிடித்துள்ளார்.அங்கு, போலீஸ் சீறுடையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், தன்னை போலீஸ் உயரதிகாரி எனக் கூறி, சிகரெட் பிடித்ததால் கைது செய்யப்

எழும்பூர் :அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி, மறைமலை அடிகள் தெருவைச் சேர்ந்தவர் கேசவன், 24; அண்ணா சாலையில் மோட்டார் கம்பெனியில் பணிபுரிகிறார்.

இவர் நேற்று முன்தினம் மாலை, எழும்பூர் எத்திராஜ் சாலையிலுள்ள டீ கடையில் நின்று சிகரெட் பிடித்துள்ளார்.

அங்கு, போலீஸ் சீறுடையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், தன்னை போலீஸ் உயரதிகாரி எனக் கூறி, சிகரெட் பிடித்ததால் கைது செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.

அத்துடன், கைது செய்யாமல் இருக்க, 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். பயந்து போன கேசவன், அங்கிருந்த ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்துக் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கியதும், மர்ம நபர் கிளம்பினார்.

சந்தேகமடைந்து கேசவன், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, இதில் தொடர்புள்ள நெற்குன்றம், ஜெயராம் நகரைச் சேர்ந்த டான்ஸ் ஸ்டுவர்ட், 32, என்பவரை நேற்று பிடித்தனர்.

ஊர்க்காவல் படையில் வேலை பார்க்கும் இவர், போலீஸ் அதிகாரி எனக் கூறி பணம் பறித்தது விசாரணையில் தெரிந்தது. இதுபோல் வேறு எங்காவது பணம் பறித்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X