நீர் தேங்க விடுவதால் டெங்கு பீதி தனிநபர் மீது நடவடிக்கை பாயுமா?

Added : நவ 24, 2022 | |
Advertisement
திருவல்லிக்கேணி, தனி நபர் ஒருவர் குடியிருப்புப் பகுதியில் தேங்க விடும் தண்ணீரால், அதில் பாசி படர்ந்து, டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாய நிலை உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், 116வது வார்டு திருவல்லிக்கேணி, வெங்கடாசலம் முதல் சந்து பகுதியில், கடந்த சில நாட்களாகவே தண்ணீர் தேங்கி, அதில் பாசி படர்ந்துள்ளது.மேலும், தண்ணீரில் டெங்கு
 நீர் தேங்க விடுவதால் டெங்கு பீதி தனிநபர் மீது நடவடிக்கை பாயுமா?



திருவல்லிக்கேணி, தனி நபர் ஒருவர் குடியிருப்புப் பகுதியில் தேங்க விடும் தண்ணீரால், அதில் பாசி படர்ந்து, டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாய நிலை உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், 116வது வார்டு திருவல்லிக்கேணி, வெங்கடாசலம் முதல் சந்து பகுதியில், கடந்த சில நாட்களாகவே தண்ணீர் தேங்கி, அதில் பாசி படர்ந்துள்ளது.
மேலும், தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையும் உள்ளது.அந்த பகுதியில் வசிக்கும் தனி நபர் ஒருவர், அடிபம்பில் பிடிக்கும் தண்ணீரை, அங்குள்ள தெரு முழுதும் வீணடிப்பதாக கூறுகின்றனர்.

இந்த தண்ணீர் தேங்கி, தெரு முழுதும் சகதியாய் காணப்படுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் நோய்த் தொற்று அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:

குடியிருப்புப் பகுதியில் தேங்கும் தண்ணீரில் இருந்து, கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இரவு முழுதும் கொசுக்கடியில் அவதிப்படுகிறோம். தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளும்படி கூறினாலும், அந்த நபர் கேட்பதில்லை.

சென்னை மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளும்படி, வீடுகளின் உரிமையாளர்களுக்கும் அறிவுரை வழங்கி வருகிறது.

ஆனால் இந்த தனி நபர், தண்ணீரை வேண்டுமென்றே தேங்க விடுகிறார். கொசு உற்பத்திக்குக் காரணமாக இருக்கும் அந்த நபர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் தேங்காமலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X