முற்றிலும் பலவீனமான பள்ளி சுற்றுச்சுவர் புதிதாக அமைக்க பெற்றோர் கோரிக்கை

Added : நவ 24, 2022 | |
Advertisement
ஐஸ் அவுஸ், அரசு உதவிபெறும் பள்ளியின் சுற்றுச்சுவர் முற்றிலும் பலவீனமாக இருப்பதால், அதை முழுமையாக இடித்து, பெரும் விபத்து ஏற்படாதவாறு, புதிதாக சுற்றுச்சுவர் கட்ட வேண்டுமென, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை, திருவல்லிக்கேணி, இருசப்ப கிராம தெருவில், ஐஸ் அவுஸ் காவல் நிலையம் அருகில், அரசு உதவிபெறும் என்.கே.டி., மகளிர் மேல்நிலைப் பள்ளி

ஐஸ் அவுஸ், அரசு உதவிபெறும் பள்ளியின் சுற்றுச்சுவர் முற்றிலும் பலவீனமாக இருப்பதால், அதை முழுமையாக இடித்து, பெரும் விபத்து ஏற்படாதவாறு, புதிதாக சுற்றுச்சுவர் கட்ட வேண்டுமென, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, திருவல்லிக்கேணி, இருசப்ப கிராம தெருவில், ஐஸ் அவுஸ் காவல் நிலையம் அருகில், அரசு உதவிபெறும் என்.கே.டி., மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது.

திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஐஸ் அவுஸ், ஜாம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அதிகமான மாணவியர் இந்த பள்ளியில் படிக்கின்றனர்.பழமை வாய்ந்த இந்த பள்ளியில், 500 மீட்டர் அளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இது பழைய சுற்றுச்சுவர் என்பதால், வண்ணம் பூசி அழகுபடுத்தி உள்ளனர். ஆனால், மிகவும் பலவீனமாக உள்ளது. சுற்றுச்சுவர் பலவீனமாக இருப்பது குறித்து, ஏற்கனவே நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

ஆனாலும், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், பருவமழை பெய்து வந்ததில், சுற்றுச்சுவர் முற்றிலும் பலவீனமானது. நேற்று முன்தினம் இரவு, சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து, அங்கிருந்த கார்கள் சேதமடைந்தன.

தகவலின்படி, தீயணைப்பு வீரர்கள் வந்து, கட்டட இடிபாடுகளை அங்கிருந்து அகற்றினர். பள்ளி நேரத்தில் இந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருந்தால், பலர் காயம்அடைந்திருப்பர்.

தற்போது, இடிந்த சுவர் பகுதியில், தடுப்புக்காக சவுக்குக் கட்டையால் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.இருந்தும், சுற்றுச்சுவரின் பல இடங்களில் விரிசல் விட்டு, முற்றிலும் பலவீனமாக இருப்பதால், மாணவியர் அச்சத்துடன் உள்ளனர். இதனால், விடுமுறை நாட்களில் சுற்றுச்சுவரை முழுதும் இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டுமென, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

பள்ளிகளில் ஆய்வு

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சென்னையில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பல பழமையானவை. மழைக்காலங்களில், சில பள்ளிகளின் கட்டடம் வலுவிழந்து காணப்படுகிறது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும், கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். பெரும் விபத்து ஏற்படும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, 'அரசு உதவிபெறும் பள்ளிகள் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்ய வேண்டும்.

'பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து, ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தி விரிசல், பலவீனமாக இருந்தால், அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும்.

'மாணவ, மாணவியர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால், அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X