பயிர் கழிவுகளை உரமாக்குங்க! பயிற்சி முகாமில் அறிவுறுத்தல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
சூலுார்:''பயிர்கழிவுகளை உரமாக்கி பயன்படுத்தினால், உரச்செலவு குறையும்; மகசூலுக்கு பயனளிக்கும்," என, பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.வேளாண் மற்றும் உழவர் நலத்துறை 'அட்மா' திட்டம் சார்பில், பயிர் கழிவு மேலாண்மை பயிற்சி முகாம் பீடம்பள்ளியில் நடந்தது. வேளாண் இணை இயக்குநர் முத்துலட்சுமி, துணை இயக்குனர் கிருஷ்ணவேணி( மத்திய திட்டம்) ஆகியோர் வேளாண் திட்டங்கள்

சூலுார்:''பயிர்கழிவுகளை உரமாக்கி பயன்படுத்தினால், உரச்செலவு குறையும்; மகசூலுக்கு பயனளிக்கும்," என, பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை 'அட்மா' திட்டம் சார்பில், பயிர் கழிவு மேலாண்மை பயிற்சி முகாம் பீடம்பள்ளியில் நடந்தது. வேளாண் இணை இயக்குநர் முத்துலட்சுமி, துணை இயக்குனர் கிருஷ்ணவேணி( மத்திய திட்டம்) ஆகியோர் வேளாண் திட்டங்கள் குறித்து விளக்கினர்.

காரமடை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சுகந்தி பேசுகையில்,"அறுவடை முடிந்த பின் விளை நிலத்தில் உள்ள அனைத்தும் பண்ணைக்கழிவுகள் ஆகும். அதனால், பலன் இல்லை என்று நினைக்க வேண்டாம். அவற்றை உரமாக்கி பயன் பெறலாம்; கூடுதல் மகசூலும் பெறலாம். பயிர்கழிவுகளை சிறு துண்டுகளாக்கி, தனி இடத்தில் குவித்து வைத்து மக்க வைக்க வேண்டும். வேளாண் பல்கலை பரிந்துரைக்கும் நுண்ணுயிர் கூட்டுக்கலவையை பயன்படுத்தி மக்க வைக்கலாம். ஒரு 'டன்' பயிர் கலவைக்கு, 2 கிலோ பயோமின்னரலைசரை, 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கிடைக்கும் கரைசலை, கழிவுகள் மீது தெளித்து மக்க வைக்கலாம்," என்றார்.

சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி, ஊராட்சி தலைவர் குமாரவேல், 'அட்மா' தலைவர் செல்வராஜ்உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X