மாவட்ட கால்பந்து போட்டி மதரசா அரசு பள்ளி சாம்பியன்

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை, :தமிழக அரசின், பள்ளிக்கல்வித் துறை சார்பில், சென்னை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையே, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள், பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளியில் நடந்தன.இதில், 18 குறு வட்ட அளவில் ஏற்கனவே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் பங்கேற்றன.இப்போட்டிகளில் இறுதியாக, அரசு மதரசா 'ஐ ஆசாம்' மேல்நிலைப் பள்ளியும், புனித கேப்ரியேல்
 மாவட்ட கால்பந்து போட்டி மதரசா அரசு பள்ளி சாம்பியன்

சென்னை, :தமிழக அரசின், பள்ளிக்கல்வித் துறை சார்பில், சென்னை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையே, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள், பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளியில் நடந்தன.

இதில், 18 குறு வட்ட அளவில் ஏற்கனவே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் பங்கேற்றன.இப்போட்டிகளில் இறுதியாக, அரசு மதரசா 'ஐ ஆசாம்' மேல்நிலைப் பள்ளியும், புனித கேப்ரியேல் மேல்நிலைப் பள்ளியும் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தி, முதல் பாதியில் சமநிலையில் இருந்தனர். இரண்டாவது பாதி நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை பெற்றது.தொடர்ந்து, இரு அணிகளுக்கும் 'பெனால்டி' முறையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க சுற்றுகள் நடத்தப்பட்டன.

இதில், அரசு மதரசா பள்ளி, 4 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, பெரம்பூர் டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ஜோசப் பரிசுகளை வழங்கினார்.இந்த வெற்றியால், அரசு மதரசா மேல்நிலைப் பள்ளி, டிசம்பர் மாதம் நாமக்கல்லில் நடக்கவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X