மாற்றுத்திறன் குழந்தைகளை சேர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : நவ 24, 2022 | |
Advertisement
உடுமலை:சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், இணைவோம்-மகிழ்வோம் நிகழ்ச்சி நடந்தது.தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், நவ., 14 முதல் டிச., 3ம் தேதி வரை மாற்றுத்திறன் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து, உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்,

உடுமலை:சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், இணைவோம்-மகிழ்வோம் நிகழ்ச்சி நடந்தது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், நவ., 14 முதல் டிச., 3ம் தேதி வரை மாற்றுத்திறன் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மாற்றுத்திறன் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில், பள்ளியளவிலான செயல்பாடுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில், பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இணைவோம் - மகிழ்வோம் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியை, வட்டாரக்கல்வி அலுவலர் மனோகரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுமதி, பள்ளி தலைமையாசிரியர் கோப்பெருந்தேவி துவக்கி வைத்தனர்.

பள்ளி மாணவர்கள், சக மாணவர்கள் குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுடனான நட்பை வளப்படுத்தும் விதமாக காகிதப்பறவை செய்தல், வண்ணங்கள் பூசி கை அச்சினை பதித்தல், வண்ண காகிதங்களில் பட்டம் செய்தல், பிரமிடு செய்தல், இலைகளைக்கொண்டு பறவைகள் விலங்குகள் செய்தல், வாழ்த்து அட்டை செய்தல், ப்ரென்ட்ஷிப் பேண்ட் செய்தல், சிறப்பு குழந்தைகள் மற்றும் அவர்கள் பெற்றோர்களை கவுரவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி மாணவர்கள், சிறப்பாசிரியர், இயன்முறை மருத்துவர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X