தென்னையில் பரவும் நத்தை புழு தாக்குதலால்...சோதனை மேல் சோதனை!விஞ்ஞானி குழுவுடன் வேளாண்துறையினர் ஆய்வு

Added : நவ 24, 2022 | |
Advertisement
உடுமலை;குடிமங்கலம் வட்டாரம், ஆத்துக்கிணத்துப்பட்டியில், தென்னையில் புதிய வகையான நத்தை புழு தாக்குதல் குறித்து, விஞ்ஞானிகள் குழு மற்றும் வேளாண் துறை ஆய்வு செய்தனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, பருவ மழை திருப்தியாக பெய்தாலும், தேங்காய், கொப்பரை விலை பாதியாக சரிவு, தொட்டி, தடுக்கு, மட்டை உள்ளிட்ட
 தென்னையில் பரவும் நத்தை புழு தாக்குதலால்...சோதனை மேல் சோதனை!விஞ்ஞானி குழுவுடன் வேளாண்துறையினர் ஆய்வு

உடுமலை;குடிமங்கலம் வட்டாரம், ஆத்துக்கிணத்துப்பட்டியில், தென்னையில் புதிய வகையான நத்தை புழு தாக்குதல் குறித்து, விஞ்ஞானிகள் குழு மற்றும் வேளாண் துறை ஆய்வு செய்தனர்.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, பருவ மழை திருப்தியாக பெய்தாலும், தேங்காய், கொப்பரை விலை பாதியாக சரிவு, தொட்டி, தடுக்கு, மட்டை உள்ளிட்ட உப பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால், தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், தென்னையில், புது வகையான நத்தை புழு தாக்குதல் துவங்கியுள்ளது. குடிமங்கலம் வட்டாரம், ஆத்துகிணத்துப்பட்டியிலுள்ள இளம் விவசாயி சதீஷ்குமாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில், வித்தியாசமான முறையில், புதிய வகையான புழு, ஓலைகளை கடித்து உண்டு வந்துள்ளது. அவை வேகமாக ஓலைகளை அரித்து வருவதோடு, அந்த புழுவை தொட்டாலும், அவை உண்ட இலைகளை தொட்டாலும், உடல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த விவசாயி, ஆராய்சி மைய விஞ்ஞானிகள், வேளாண் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.


நேரில் கள ஆய்வு



இதனையடுத்து, வேளாண் பல்கலை, திறந்தவெளி மற்றும் தொலை துார கல்வி இயக்கக பூச்சியியல் துறை இணைப்பு பேராசிரியர் ராஜ மாணிக்கம் மற்றும் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் அருள்பிரகாஷ் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு செய்து, கட்டுப்படுத்தும் பரிந்துரைகள் கொடுத்துள்ளதோடு, புழுக்களை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

வேளாண் விஞ்ஞானிகள் குழுவினர் கூறியதாவது:

ஆத்துக்கிணத்துப்பட்டியில், சுமார், 5 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட, ஒரு வயதுடைய நெட்டை ரக தென்னந்தோப்பில், நத்தை புழு தாக்குதல் குறைந்தளவு காணப்பட்டது. இவ்வகை நத்தைப்புழுவானது, தென்னை ஓலையின் நடுநரம்பினை மட்டும், விட்டு, விட்டு இலைகளை உண்டு சேதத்தை ஏற்படுத்தக்கூடியது.

இப்புழுவினை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கடைபிடித்து, எளிதில் கட்டுப்படுத்தலாம். அதிக சேதமான தென்னை ஓலைகளை வெட்டி, அப்புறப்படுத்தி எரித்து, அழிக்க வேண்டும்.

இந்த புழுவை தொட்டால், அரிப்பு உள்ளிட்ட தோல் நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், ஓலைகளில் ஒட்டியிருக்கும் புழுக்களை, கையுறை அணிந்து, எடுக்க வேண்டும்.

மண்ணெண்ணை அல்லது பூச்சிக்கொல்லி மருந்து கலந்த நீரில் இட்டு அழிக்க வேண்டும். ஏக்கருக்கு, இரண்டு விளக்கு பொறிகள் வீதம், இரவு, 7:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரை வைத்து, தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.

குளோரான்ட்ரானி -லிப்ரோல், 18.5 சதவீதம் எஸ்.இ., மருந்தினை, 10 லிட்டர் தண்ணீருக்கு, 3 மி.லி., என்ற அளவில், ஒட்டுத்திரவம், 10 மி.லி., யுடன் கலந்து தென்னை ஓலையின் பின்புறம் நன்கு நனையும் படி தெளித்தால், நத்தை புழுக்களை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.

தென்னை விவசாயிகள், தங்கள் தோப்புகளில் நத்தைப்புழு தாக்குதல் தென்பட்டால், மேற்கண்ட முறையினை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

ஆய்வின் போது, குடிமங்கலம் வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, உதவி வேளாண்மை அலுவலர் கோதண்டபாணி, விவசாயிகள் சதீஸ்குமார், கோவிந்தராஜ் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன செயலாளர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

தென்னை சாகுபடியில், வெள்ளை ஈ தாக்குதல், விலை வீழ்ச்சி, வாடல் நோய் என வரிசையாக பிரச்னைகள் அதிகரித்துள்ளது; இந்நிலையில், தற்போது, நத்தை புழுவும் பரவி வருவது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X