இடிந்து விழும் நிலையில் குடியிருப்புகள் உயிர்பலி அபாயத்தில் மக்கள் தவிப்பு

Added : நவ 24, 2022 | |
Advertisement
திருவொற்றியூர் :எண்ணுார் அனல்மின் நிலைய ஊழியர் குடியிருப்புகள் புதர் மண்டியிருப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலா வருகின்றன. கட்டடம் பழுதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் குடியிருப்பு வாசிகள் உள்ளனர்.சென்னை, எண்ணுார் அனல்மின் நிலையம் 1970ல் துவங்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு, பழமை காரணமாக மூடப்பட்டு, அங்கு பணியாற்றிய ஊழியர்கள்,
 இடிந்து விழும் நிலையில் குடியிருப்புகள் உயிர்பலி அபாயத்தில் மக்கள் தவிப்பு

திருவொற்றியூர் :எண்ணுார் அனல்மின் நிலைய ஊழியர் குடியிருப்புகள் புதர் மண்டியிருப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலா வருகின்றன. கட்டடம் பழுதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் குடியிருப்பு வாசிகள் உள்ளனர்.

சென்னை, எண்ணுார் அனல்மின் நிலையம் 1970ல் துவங்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு, பழமை காரணமாக மூடப்பட்டு, அங்கு பணியாற்றிய ஊழியர்கள், வடசென்னை அலகு 1, 2, மற்றும் சென்னையின் மின்வாரிய பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு விட்டனர்.

அலங்கோலம்

இங்கு பணியாற்றிய ஊழியர்கள் தங்குவதற்காக எர்ணாவூர், எண்ணுார் அனல்மின் நிலையம் எதிரே மற்றும் சின்ன எர்ணாவூர் குப்பம் எதிரே என, மூன்று இடங்களில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அடங்கிய அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன.

தற்போது, பெரும்பாலான குடியிருப்புகளில், ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

குடியிருப்புகள் கட்டி பல ஆண்டுகள் கடந்த நிலையில், கட்டடங்கள் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, செடிகள் வளர்ந்து, பாசி பிடித்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. வீடுகளின் ஜன்னல், கதவுகள், மேல்தளம் உள்ளிட்டவை உடைந்து விழுந்து, அபாயகரமான நிலையில் உள்ளன.

தவிர, குடியிருப்புகளுக்கு தண்ணீர் எடுக்கக் கூடிய கிணறு பக்கவாட்டு சுவர் சேதமடைந்து, தரையோடு தரையாக உள்ளது.

சிறுவர்கள் விளையாடும் போது, தவறுதலாக கிணற்றை எட்டிப் பார்க்கின்றனர். 'மோட்டர்' அறையும், குடிநீர் தேக்கநிலை தொட்டியும், படுமோசமாக உள்ளது.

இந்த குடியிருப்புகளை முறையாக பராமரிக்க வேண்டிய அனல்மின் நிலைய நிர்வாகத்தினர் கண்டுகொள்வதில்லை.

விளைவு, குடியிருப்புகளைச் சுற்றிலும் ஆளுயுரம் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர் போல் காட்சியளிக்கிறது.

இந்த முட்புதருக்குள் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.

சில நேரங்களில், வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக வரும் பாம்புகளால் தரைத்தள வாசிகள் துாக்கமிழந்து தவிக்கின்றனர்.

குடியிருப்புகளுக்கு காவலாளிகள் இல்லாததால், சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாகி விட்டது. கைவிடப்பட்ட, 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், சிலர் அத்து மீறி நுழைந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெருநாய்கள்

மேலும், குடியிருப்புகளை சுற்றிலும், நுாற்றுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருவதால், குடியிருப்பு வாசிகள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.

மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வோர், விளையாடும் குழந்தைகள், வேலைக்கு சென்று டூ - வீலரில், வீட்டிற்கு திரும்புவோரை பதம் பார்க்கின்றன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, இடியும் நிலையில் இருக்கும் அனல்மின் நிலைய குடியிருப்பு கட்டடங்களை இடித்து விட்டு, புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும்.

தற்காலிக நடவடிக்கையாக முட்புதர்களை அகற்றி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால், அனல்மின் நிலைய ஊழியர் குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்து, பெரும் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X