உரிமம் பெற்ற விதைகளை விற்க வேண்டும்: விதை ஆய்வுத்துறை எச்சரிக்கை

Added : நவ 24, 2022 | |
Advertisement
உடுமலை;விவசாயிகளுக்கு, உரிமம் பெற்ற தரமான விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்; உரிமம் இல்லாத விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, விதை ஆய்வுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், 157 விதை உரிமம் பெற்ற அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்றுப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.கார்த்திகை

உடுமலை;விவசாயிகளுக்கு, உரிமம் பெற்ற தரமான விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்; உரிமம் இல்லாத விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, விதை ஆய்வுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், 157 விதை உரிமம் பெற்ற அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்றுப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.

கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், தரமான விதைகளை அரசு உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே, வாங்கி பயன்படுத்த வேண்டும், என விதை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் கூறியதாவது: விவசாயத்திற்கு முக்கியமான இடுபொருள் விதையே ஆகும். தரமான விதைகளை உரிய விலையில் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை செயல்பட்டு வருகிறது.

சாகுபடிக்கு தேவையான விதைகளை விவசாயிகள் வாங்கும் போது, உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

விதைகளை வாங்கும் போது, தவறாமல் விதை விபர பட்டியலில் உள்ள, பயிர் ரகம், குவியல் எண், காலாவதி நாள், உரிய பருவம் ஆகியவற்றை கவனித்து வாங்க வேண்டும்.

மேலும், விற்பனை ரசீதில் உள்ள விபரங்களும், விதை விபர அட்டையில் உள்ள விபரங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வதோடு, அதில் விவசாயிகள் கையொப்பமிட்டு வாங்க வேண்டும்.

விற்பனை ரசீதினை பயிர் சாகுபடி காலம் முடியும் வரை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

உரிமம் பெறாத ஏஜன்டுகள் வாயிலாகவோ, எண்ணெய் உற்பத்தியாளர்களிடமோ, வெளிமாநில நிலக்கடலை விதைகளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

உரிமம் இல்லாமல், நிலக்கடலை விதைகளை விற்பவரின் மீது விதை சட்டங்கள் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X