மருத்துவ முகாம் நடத்த மலைவாழ் மக்கள் கோரிக்கை

Added : நவ 24, 2022 | |
Advertisement
உடுமலை:தொடர் மழைக்கு பிறகு, மலைவாழ் கிராமங்களில், சுகாதாரத்துறை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.தற்போது வடகிழக்கு பருவமழை சற்று இடைவெளி விட்டுள்ளது. உடுமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், காய்ச்சல் உட்பட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை,

உடுமலை:தொடர் மழைக்கு பிறகு, மலைவாழ் கிராமங்களில், சுகாதாரத்துறை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது வடகிழக்கு பருவமழை சற்று இடைவெளி விட்டுள்ளது. உடுமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், காய்ச்சல் உட்பட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.

எவ்வித மருத்துவ வசதியும் அப்பகுதியில் இல்லாததால், சமவெளிப்பகுதிக்கு, வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக சமவெளிக்கு வந்து செல்ல மலைவாழ் கிராம மக்கள், மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களை, தொட்டில் கட்டி சிகிச்சைக்காக அழைத்து வர வேண்டியுள்ளது.

சமீபத்தில், பெய்த தொடர் மழைக்குப்பிறகு, சில கிராமங்களில், உடல் நல பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக, அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். அங்கு போதுமான சிகிச்சை வசதிகள் கிடைப்பதில்லை. அவர்களை காக்கும் வகையில், சுகாதாரத்துறை வாயிலாக, அனைத்து மலைவாழ் கிராமங்களிலும், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும். முகாமில், அனைத்து வகை பரிசோதனைகளையும் மேற்கொண்டு, தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும்.

இதுகுறித்து, தமிழக அரசும், சுகாதாரத்துறையினரும், வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X