சாலை ஆக்கிரமிப்புக்கு தீர்வு பாதசாரிகள், பயணியர் நிம்மதி

Added : நவ 24, 2022 | |
Advertisement
பெரம்பூர், நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், முக்கிய சாலை சந்திப்பில் ஏற்படும் வாகன ஆக்கிரமிப்பிற்கு, போக்குவரத்து போலீசார் தீர்வு கண்டனர்.சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே, நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல், டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி விடுவர். அதனால், பாதசாரிகள் மட்டுமின்றி, அங்கு மாநகர
 சாலை ஆக்கிரமிப்புக்கு தீர்வு பாதசாரிகள், பயணியர் நிம்மதி



பெரம்பூர், நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், முக்கிய சாலை சந்திப்பில் ஏற்படும் வாகன ஆக்கிரமிப்பிற்கு, போக்குவரத்து போலீசார் தீர்வு கண்டனர்.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே, நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல், டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி விடுவர்.

அதனால், பாதசாரிகள் மட்டுமின்றி, அங்கு மாநகர பேருந்துக்கு காத்திருக்கும் பயணியரும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது.

மேலும், பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியரும், மேற்கண்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். இது குறித்து, கடந்த 22ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் பிறகு, செம்பியம் போக்குவரத்து போலீசார், அங்குள்ள ஹோட்டல் மற்றும் கடைகளுக்கு வந்து செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும், பேருந்து பயணியர், பாதசாரிகள் பாதிக்கப்படாமல் இருக்க, சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் பணியை, தொடர்ந்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X