வனப்பகுதி சாலையை விரிவுபடுத்த திட்டம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்,:சோமங்கலம் அருகே வனப் பகுதி குறுகலான சாலை 2.2 கி.மீ., துாரத்திற்கு 5.10 கோடி ரூபாய் மதிப்பில் இருவழியாக விரிவுபடுத்த உள்ளது.சோமங்கலம் - புதுப்பேர் சாலையானது, குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையையும், தாம்பரம் - -சோமங்கலம் சாலையையும் இணைக்கிறது.இந்த சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலையில்
 வனப்பகுதி சாலையை விரிவுபடுத்த திட்டம்

ஸ்ரீபெரும்புதுார்,:சோமங்கலம் அருகே வனப் பகுதி குறுகலான சாலை 2.2 கி.மீ., துாரத்திற்கு 5.10 கோடி ரூபாய் மதிப்பில் இருவழியாக விரிவுபடுத்த உள்ளது.

சோமங்கலம் - புதுப்பேர் சாலையானது, குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையையும், தாம்பரம் - -சோமங்கலம் சாலையையும் இணைக்கிறது.

இந்த சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலையில் சோமங்கலம் ஊராட்சி, மேலாத்துார் முதல், பூந்தண்டலம் ஊராட்சி சக்தி நகர் வரை 2.5 கி.மீ., துாரம் வனப் பகுதியில் ஒரு வழி சாலை அமைந்துள்ளது.

குறுகலான இந்த சாலையில், எதிரெதிரே வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும், அடிக்கடி விபத்தும் நடந்து வந்தன. இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில், இந்த சாலையை விரிவுபடுத்த ஒரு மாதத்திற்கு முன், அரசாணை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்த சாலை 2.2 கி.மீ., துாரத்திற்கு 5.10 கோடி ரூபாய் மதிப்பில் இருவழி சாலையாக விரிவுப்படுத்த ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் விரிவாக்க பணிகள் துவக்கப்படும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X