வரி உயர்வுக்கு கண்டனம் : கவுன்சிலர்கள் போராட்டம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
கூடலுார்:வரி உயர்வை கண்டித்து, கூடலுார் தேவர்சோலை பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கூடலுார் தேவர்சோலை பேருராட்சி மன்ற கூட்டம் தலைவர் வள்ளி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் (பொ.,) பிரதீப்குமார் முன்னிலை வகித்தார்.மன்ற தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது, 'பேரூராட்சியில், 100 சதவீதத்துக்கு மேல் வரி உயர்த்தபட்டுள்ளதால் மக்கள்
 வரி உயர்வுக்கு கண்டனம் : கவுன்சிலர்கள் போராட்டம்

கூடலுார்:வரி உயர்வை கண்டித்து, கூடலுார் தேவர்சோலை பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலுார் தேவர்சோலை பேருராட்சி மன்ற கூட்டம் தலைவர் வள்ளி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் (பொ.,) பிரதீப்குமார் முன்னிலை வகித்தார்.

மன்ற தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது, 'பேரூராட்சியில், 100 சதவீதத்துக்கு மேல் வரி உயர்த்தபட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தினர்.

தொடர்ந்து, துணை தலைவர் யூனேஷ்பாபு, கவுன்சிலர்கள் அனிபா, ஜோஷ். மாதேஷ், நாசர் உட்பட், 12 கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கவுன்சிலர் மாதேஷ் சாலை ஓரத்தில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டார். கவுன்சிலர்களிடம் செயல் அலுவலர் பிரதீப்குமார், இன்ஸ்பெக்டர் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தினர். பின், கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X