ரூ.3 கோடி நுாதன மோசடி போலி அதிகாரிக்கு 'கம்பி'

Added : நவ 24, 2022 | |
Advertisement
ஆவடி, சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் அப்சல்; டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். கடந்த செப்., 27ம் தேதி டில்லி, நொய்டாவை சேர்ந்த கோவிந்த் துள்சியன், 42, ஹெர்மன் சபர்வால், 43, ஆகியோர், மத்திய அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் என, அப்சலிடம் அறிமுகமாகி உள்ளனர். பின், கோவிட் 19 தடுப்பு மருந்தை தமிழகத்தில் 'சப்ளை' செய்யும் டிரான்ஸ்போர்ட் ஒப்பந்தம் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். இது, 100 கோடி



ஆவடி, சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் அப்சல்; டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார்.

கடந்த செப்., 27ம் தேதி டில்லி, நொய்டாவை சேர்ந்த கோவிந்த் துள்சியன், 42, ஹெர்மன் சபர்வால், 43, ஆகியோர், மத்திய அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் என, அப்சலிடம் அறிமுகமாகி உள்ளனர். பின், கோவிட் 19 தடுப்பு மருந்தை தமிழகத்தில் 'சப்ளை' செய்யும் டிரான்ஸ்போர்ட் ஒப்பந்தம் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.

இது, 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் எனக் கூறி, அப்சலை டில்லிக்கு வரவழைத்துள்ளனர். பின், மத்திய அரசின் நிர்மான் அலுவலகத்தில் வைத்து, ஒப்பந்தம் கையெழுத்தானதாகக் கூறி, முன்தொகையாக வங்கி கணக்கில், 3.10 கோடி ரூபாய் வாங்கியுள்ளனர்.

ஆனால், அப்சலுக்கு ஒப்பந்தம் கிடைக்கவில்லை. தான் ஏமாந்ததை உணர்ந்த இவர், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, ஹெர்மன் சபர்வாலை நேற்று கைது செய்தனர். துள்சியானை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X