வேகவதி ஆற்றங்கரையோர சாலைக்கு தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அண்ணா நுாற்றாண்டு பூங்கா சாலை, முடங்கி வீதி மற்றும் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் தெருவில் இருந்து, தாயார் குளம் அருகில், வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள சிறுபாலம் வழியாக கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கு செல்லும் சாலை உள்ளது.பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும்
 வேகவதி ஆற்றங்கரையோர சாலைக்கு தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அண்ணா நுாற்றாண்டு பூங்கா சாலை, முடங்கி வீதி மற்றும் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் தெருவில் இருந்து, தாயார் குளம் அருகில், வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள சிறுபாலம் வழியாக கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கு செல்லும் சாலை உள்ளது.

பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகம் நிறைந்த இந்த சாலையில், வேகவதி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள சாலைக்கு பாதுகாப்பு தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது.

இதனால், இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, தவறி வேகவதி ஆற்றில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, வேகவதி ஆற்றையொட்டி உள்ள சாலைக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X