கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் டீசல் சப்ளை மையம், கேமராக்கள் நிறுவ முடிவு

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்தில், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள், 5 கோடி ரூபாய் செலவில் அமைக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, 2002ல் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.இங்கு, அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் வந்து செல்வதால்



சென்னை வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்தில், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள், 5 கோடி ரூபாய் செலவில் அமைக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, 2002ல் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

இங்கு, அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் வந்து செல்வதால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.

இதற்காக, வருவாய் துறையிடம் இருந்து, 88 ஏக்கர் நிலத்தை சி.எம்.டி.ஏ., பெற்றது. இதில், தொல்லியல் துறை தடை காரணமாக, 44 ஏக்கர் நிலம் மட்டுமே பேருந்து நிலைய பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது.


புதிய நடவடிக்கை



இந்த இடத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலைய கட்டுமான பணிகள், 2019ல் துவங்கின.

கட்டுமான பணிகள் தற்போது, இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இங்கு பாதுகாப்பு, பயன்பாட்டுக்கான வசதிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அதன்படி, கண்காணிப்பு கேமரா மற்றும் ஒருங்கிணைந்த கட்டட பாதுகாப்பு வசதிகளை, நிலையத்தில் ஏற்படுத்த சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் தேர்வு முடிக்கப்பட்டுள்ளது.

இங்கு, அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகள் விரைவில் துவங்க உள்ளது.


டீசல் மையம்



கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில், 215 பேருந்துகள் நிற்கும் வகையில் இடவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பேருந்துகளுக்கான பராமரிப்பு மையமும் ஏற்படுத்தப்பட உள்ளது.

இங்கு வந்து செல்லும் பேருந்துகளின் தேவையை கருதி, 16,145 சதுர அடி பரப்பளவில், டீசல் வினியோக மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்து, போக்குவரத்து கழகங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான இடம் வாடகை அடிப்படையில் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.


பொங்கலுக்கு திறப்பு



நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இங்கு, கண்காணிப்பு கேமராக்கள், டீசல் வினியோக மையம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கான இறுதி முடிவுகள், நேற்று நடந்த குழும கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பணிகள் முடிக்கப்பட்டு ஜன., முதல் வாரத்தில், புதிய பேருந்து நிலைய திறப்பு விழா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X