ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.70 கோடியை நிறுத்தி வைத்து... அதிரடி! தூர் வாரும் பணியை தொடர மாநகராட்சி கிடுக்கிப்பிடி

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள், மழைக்காலம் முடியும் வரை துார் வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதிரடி நடவடிக்கையாக, துார் வார ஒதுக்கப்பட்ட 70 கோடி ரூபாயை நிறுத்தி வைத்துள்ளது.சென்னையில் கடந்த 2021ம் ஆண்டு பெய்த கனமழையால், பல இடங்களில் நீர் தேங்கியது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை
   ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.70 கோடியை நிறுத்தி வைத்து...  அதிரடி!    தூர் வாரும் பணியை தொடர மாநகராட்சி கிடுக்கிப்பிடி


சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள், மழைக்காலம் முடியும் வரை துார் வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதிரடி நடவடிக்கையாக, துார் வார ஒதுக்கப்பட்ட 70 கோடி ரூபாயை நிறுத்தி வைத்துள்ளது.

சென்னையில் கடந்த 2021ம் ஆண்டு பெய்த கனமழையால், பல இடங்களில் நீர் தேங்கியது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


முன்னுரிமை



இதைத் தவிர்க்க, முன்னுரிமை அடிப்படையில், 'சிங்காரச் சென்னை 2.0' திட்டத்தின் கீழ், 277.04 கோடி ரூபாய் மதிப்பில், 60.83 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோல், வெள்ள நிவாரண நிதியின் கீழ், 295.73 கோடி ரூபாய் செலவில், 107.57 கி.மீ., நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ், 27.21 கோடி ரூபாய் மதிப்பில் 10 கி.மீ., நீளத்திற்கும் வடிகால் பணிகள் நடக்கிறது.

இத்துடன், மூலதன நிதியின் கீழ், 8.26 கோடி ரூபாய் மதிப்பில், 1.05 கி.மீ., நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில், 3,220 கோடி ரூபாய் மதிப்பில், 769 கி.மீ., நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின் கீழ், கோவளம் வடிநிலப் பகுதியில், 1,714 கோடி ரூபாய் மதிப்பில், 360 கி.மீ., நீளத்திற்கும் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.

உலக வங்கி நிதியுதவியின் கீழ், விடுபட்ட இடங்களில், 120 கோடி ரூபாய் மதிப்பில், 44.88 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதைத் தவிர, நெடுஞ்சாலை மற்றும் நீர்வளத் துறைகள் வாயிலாகவும், புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.


பணி ஆணை



இதேபோல், ஏற்கனவே உள்ள, 1,300 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகால்களை துார் வார, 70 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்ததாரர்கள் நீர்நிலைகள், சாலையில் இருந்து மழைநீர் வடிகாலுக்கு நீர் செல்லும் பாதையான வண்டல் வடிகட்டி தொட்டிகள் மற்றும் கால்வாய்களில் துார் வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், இம்மாத துவக்கத்தில் பெய்த கனமழையால், பிரதான சாலைகளில் நீர் தேங்காமல் வடிந்தது. அதேநேரம், உட்புற சாலைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில், மழைநீர் தேங்கியது.இதையும், மாநகராட்சி அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை இரவு, பகலாக பணியாற்றி வெளியேற்றினர்.இந்நிலையில், துார் வாரும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களுக்கான தொகையை, மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:

சென்னையில் பெரும்பாலான இடங்களில், அதிக கனமழை பெய்த ஓரிரு மணி நேரத்திற்குள் நீர் வடிந்து விடுகிறது. சில தாழ்வான பகுதிகளில் மட்டுமே, தண்ணீர் தேங்குகிறது.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் தீர்வு ஏற்படுத்தி, மீண்டும் நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அதேபோல், வண்டல் வடிகட்டி தொட்டிகள், நீர்நிலைகளில், டிசம்பர் மாத இறுதி வரை துார் வார, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். குறிப்பாக, தொடர் மழைக்குப் பின், குறிப்பிட்ட காலம் இடைவெளி கிடைக்கும் போது, அடுத்த மழையை சமாளிக்கும் வகையில், துார் வாரும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம்.

இதற்காக, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய 70 கோடி ரூபாயை, மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளது.

முறையாக துார் வாராமல் மழைநீர் தேங்கினால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கான தொகையை விடுவிப்பதில் சிக்கல் ஏற்படும்.கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நீர்நிலைகள், மழைநீர் வடிகால்களில் இருந்து, 80 லட்சம் கிலோ ஆகாய தாமரை, வண்டல் மண், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை அகற்றி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X