நாடு முழுதும் பொது சிவில் சட்டம் அமல்: அமித் ஷா உறுதி

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி, :''மாநில அளவில் ஆலோசனைகள், விவாதங்கள், கருத்து கேட்புகள் முடிந்தவுடன், நாடு முழுதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். இதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.புதுடில்லியில் தனியார்'டிவி' ஒன்று நேற்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில்,பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா
 நாடு ,பொது சிவில் ,சட்டம் ,அமித் ஷா உறுதி

புதுடில்லி, :''மாநில அளவில் ஆலோசனைகள், விவாதங்கள், கருத்து கேட்புகள் முடிந்தவுடன், நாடு முழுதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். இதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

புதுடில்லியில் தனியார்'டிவி' ஒன்று நேற்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில்,பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அமித் ஷா கூறியதாவது:


latest tamil news


ஜன சங்கம் காலத்தில் இருந்தே, பா.ஜ., பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இதை அமல்படுத்துவோம் என்று நாட்டு மக்களுக்கு நாங்கள் உறுதியளித்து உள்ளோம்.


ஆலோசனைகள்பா.ஜ.,வில் மட்டுமல்ல, இது அரசியல் சாசனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான நேரத்தில், நாடு முழுதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகள் உரிய சட்டம் இயற்ற வேண்டும் என, அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்முடைய நாடு மதச்சார்பற்றது. அப்படி இருக்கையில் மதத்தின் அடிப்படையில் எப்படி பாகுபாடு இருக்க முடியும். இந்த நாடும், மாநிலங்களும் மதச்சார்பற்றதாக உள்ள நிலையில், சட்டங்கள் மட்டும் எப்படி மதத்தின் அடிப்படையில் இருக்க முடியும். இதனால்,அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டத்தையே பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகள் உருவாக்க வேண்டும்.

இது தொடர்பாக, ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத் மாநிலங்களில் ஆலோசனைகள் துவங்கியுள்ளன.

இவ்வாறு மாநிலங்களில் இருந்து பெறப்படும் கருத்துகள், ஆலோசனைகள் அடிப்படையில், பொது சிவில் சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது என்பது என்னுடைய தனிப்பட்ட வெற்றி கிடையாது. நாங்கள் அனைவரும் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்ளோம். அதனால், ஒவ்வொரு வெற்றியும் அரசுக்கே சொந்தம்.

சிறப்பு அந்தஸ்து இருப்பதால்தான், இந்தியாவுடன் ஜம்மு - காஷ்மீர் இணைந்திருப்பதாக கூறி வந்தனர். தற்போது அந்த அந்தஸ்து நீக்கப்பட்டது; ஆனாலும், ஜம்மு - காஷ்மீர் நம் நாட்டின் ஒரு பகுதியாகவே உள்ளது.
அங்கு பயங்கரவாதம் என்பது மிகவும் ஆழமாக வேரூன்றியிருந்தது. அதை அகற்றி வருகிறோம். அங்கு பயங்கரவாத சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன.

கல்வீசி தாக்குதல் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இதை இந்த அரசின் மிகப் பெரிய வெற்றியாக பார்க்கிறோம்.அமலாக்கத் துறை, சி.பி.ஐ., ஆகியவற்றை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக வீண் புகார் கூறி வருகின்றனர்.

அவ்வாறு தவறாகப் பயன்படுத்தி இருந்தால், வழக்குகள் தொடரலாமே? ஆனால் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அனைத்தையும்அரசியல் ரீதியாகவேபார்க்கின்றனர்.


பா.ஜ., வெற்றி பெறும்புதுடில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் பல வசதிகள்கிடைத்து வருகின்றன.இது தொடர்பான 'வீடியோ'க்கள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து விசாரித்துநடவடிக்கை எடுக்க வேண்டியது, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பொறுப்பு.நானும் சிறை சென்றுள்ளேன்; அப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன். ஆனால், புதுடில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிடம் இதை எதிர்பார்க்க முடியாது.

ஒரு மாநில முதல்வர் அல்லது அமைச்சர் மீது வழக்குகள் இருந்தால், அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதுபோன்ற சூழ்நிலை வரும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் எதிர்பார்க்கவில்லை.

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் இடையே தான் போட்டி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சாதனைகளுடன் பா.ஜ., வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (9)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
25-நவ-202213:20:07 IST Report Abuse
venugopal s இதையே சொல்லிச் சொல்லி தான் எட்டு வருடங்களுக்கு முன் ஆட்சிக்கு வந்தீர்கள், இப்போதும் இதே பல்லவி தானா? மீதம் உள்ள இரண்டு வருடங்களையும் இதைச் சொல்லியே ஒட்டி விடுங்கள்! திரும்பவும் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கும் இதே வாக்குறுதி கொடுத்து விடலாம்! அதையும் நம்புவார்கள்!
Rate this:
25-நவ-202215:09:47 IST Report Abuse
ஆரூர் ரங்ராஜ்யசபாவில் மெஜாரிட்டி இருந்திருந்தால் இந்நேரம் நிறைவேறியிருக்கும்.🤫 காஷ்மீர் 370 மேட்டர மறந்துட்டீங்க....
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
25-நவ-202206:45:05 IST Report Abuse
Dharmavaan எல்லா மைனாரிட்டி சலுகைகளும் நிறுத்தப்பட வேண்டும்.சட்டத்தை மாற்ற இவர்களுக்கு அதிகாரம் இருக்கும் பொது இங்கு புலம்புவது கேவலம்.கொலீஜியும் முறை நீங்கினால்தான் மத்திய அரசு சுயமாக செயல்பட முடியும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-நவ-202205:47:47 IST Report Abuse
Kasimani Baskaran சூப்பர். அப்படியெனறால் இஸ்லாமிய அற நிலையச்சட்டம், கிருஸ்தவ அறநிலையச்சட்டம் என்றெல்லாம் வரப்போகிறது... துறை மந்திரிக்கு வசூல் தாறுமாறாக வரப்போகிறது. டக்ளசுக்கு அடித்தது லக்கிபிரைஸ்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X