காஞ்சி கோவில் அருகில் வாகனங்கள் மாட வீதிகளில் போக்குவரத்து நெரிசல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 54வதாக விளங்கி வருகிறது.இக்கோவில் அருகில் காஞ்சி காமாட்சியம்மன் கோவில், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில்கள் உள்ளன.வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், இக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும், வெளியூர் சுற்றுலா
 காஞ்சி கோவில் அருகில் வாகனங்கள் மாட வீதிகளில் போக்குவரத்து நெரிசல்

காஞ்சிபுரம்:பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 54வதாக விளங்கி வருகிறது.

இக்கோவில் அருகில் காஞ்சி காமாட்சியம்மன் கோவில், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில்கள் உள்ளன.

வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், இக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும், வெளியூர் சுற்றுலா பயணியர் தங்களது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை உலகளந்த பெருமாள், காமாட்சியம்மன் கோவில் அருகில், சாலையின் இருபுறமும் 'பார்க்கிங்' செய்துவிட்டு செல்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள சில லாட்ஜ்களில் 'பார்க்கிங்' வசதி இல்லை. இதனால், லாட்ஜ்களில் தங்குவதற்காக வரும் வெளியூர் மக்களும், தங்களது வாகனங்களை சன்னிதி தெருக்களில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி செல்கின்றனர்.

மிகவும் குறுகலாக இந்த சாலையில், இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவுதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

காலை நேரத்தில் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ- - மாணவியரும், அலுவலகம் செல்வோரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உலகளந்த பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த, போக்குவரத்து போலீசார் தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X