கோரிக்கைகளை வலியுறுத்தி ஊ.வ.துறையினர் போராட்டம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், நவ., 23, 24 ஆகிய இரு தேதிகளில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என, அந்த சங்கம் அறிவித்தது.அதேபோல, டிச.,14ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, ஊராட்சி செயலர்களுக்கு கருவூலத்தின் மூலமாக, ஊதியம் வழங்க

காஞ்சிபுரம்:தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், நவ., 23, 24 ஆகிய இரு தேதிகளில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என, அந்த சங்கம் அறிவித்தது.

அதேபோல, டிச.,14ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, ஊராட்சி செயலர்களுக்கு கருவூலத்தின் மூலமாக, ஊதியம் வழங்க வேண்டும்.

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரியும் கணினி இயக்குனர்களுக்கு, இளநிலை அந்தஸ்தில் ஊதியம் வழங்க வேண்டும்.

முழு சுகாதார திட்டத்தில் பணிபுரியும் மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பலவித கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு உள்ளன.

இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும், கிராமம் மற்றும் வட்டாரம் ஆகிய நிர்வாகங்களை நிர்வகிக்கும் பி.டி.ஓ.,க்கள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர்கள், இள நிலை உதவியாளர்கள் உள்ளிட்ட பல நிலை அலுவலர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X