நுாறு நாள் திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து மறியல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மேல்மலையனுார் அடுத்த மானந்தல் ஊராட்சி, மோட்டூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு வேலை வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 8:30, மணிக்கு வேலை வழங்கக் கோரி அப்பகுதியில் சாலை
 நுாறு நாள் திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து மறியல்



அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேல்மலையனுார் அடுத்த மானந்தல் ஊராட்சி, மோட்டூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு வேலை வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 8:30, மணிக்கு வேலை வழங்கக் கோரி அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவலுார்பேட்டை போலீசார், துணை பி.டி.ஓ., ஆறுமுகம் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேலை வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து 10:00 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X