தடையில்லா மின்சாரம் வழங்க 357 மின்மாற்றிகள்; விக்கிரவாண்டியில் அமைச்சர் பொன்முடி தகவல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
விக்கிரவாண்டி : 'விழுப்புரம் மாவட்டத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்க 85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 357 மின் மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன' என அமைச்சர் பொன்முடி பேசினார்.விக்கிரவாண்டி வட்டார விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த வேம்பியில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.
 தடையில்லா மின்சாரம் வழங்க 357 மின்மாற்றிகள்; விக்கிரவாண்டியில் அமைச்சர் பொன்முடி தகவல்



விக்கிரவாண்டி : 'விழுப்புரம் மாவட்டத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்க 85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 357 மின் மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன' என அமைச்சர் பொன்முடி பேசினார்.

விக்கிரவாண்டி வட்டார விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விக்கிரவாண்டி அடுத்த வேம்பியில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி வரவேற்றார்.

அமைச்சர் பொன்முடி விவசாயிகளுக்கு களை எடுக்கும் இயந்திரம், விதை நெல் தென்னங்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் விவசாயத்திற்கான தனி நிதி ஒதுக்கீடு செய்து ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் எனக் கூறினார்.

இதுவரை 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு முதல்வர் பொறுப்பேற்ற உடனே மின் இணைப்புகளை வழங்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்க 85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 357 மின் மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2021- 22ம் ஆண்டில் 3,388 இலவச மின் இணைப்புகளும், இந்த ஆண்டுக்கு 1589 மின் இணைப்புகளும் வழங்க ஒதுக்கீடு செய்து இதுவரை 1215 இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 76 சதவீதம் வரை மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இலவச ஸ்பிரேயர் வேளாண் இயந்திரம், உரம், விதை ஆகியவற்றையும் அரசு வழங்கி வருகிறது. நவீன யுகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் புது யுத்தியுடன் விவசாயம் செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது. விவசாயிகள் அரசின் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

முன்னதாக முட்டத்துாரில் புதிய மின் மாற்றியை அமைச்சர் இயக்கி வைத்தார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய், செயற்பொறியாளர் சைமன் சார்லஸ், உதவி செயற் பொறியாளர் அண்ணாதுரை, வேளாண் உதவி இயக்குனர் சரவணன்.

ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவி துரை துணை சேர்மன் ஜீவிதா ரவி, ஆத்மா குழுத் தலைவர் ரவி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரவி, ரவிதுரை, ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் முகிலன், செல்வம், ராஜேஸ்வரி சாவித்திரி, கண்காணிப்புக்கு குழு எத்திராசன், ஊராட்சி தலைவர் தனலட்சுமி ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X