மாம்பாக்கம் ஊராட்சிக்கு அலுவலகம் கட்டப்படுமா?

Added : நவ 24, 2022 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் 8,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியினர் பயன்பெறும் வகையில் 2007ல், கிளை நுாலகம் கட்டப்பட்டது. மாணவர்கள், இளைஞர்கள் வந்து, புத்தகம் படித்து பயனடைந்தனர்.இந்நிலையில், நுாலகம் அருகே இருந்த ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமானதால், 10 ஆண்டுகளுக்கு முன், நுாலக கட்டடத்திற்கு ஊராட்சி அலுவலகம்
 மாம்பாக்கம் ஊராட்சிக்கு அலுவலகம் கட்டப்படுமா?

ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் 8,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இப்பகுதியினர் பயன்பெறும் வகையில் 2007ல், கிளை நுாலகம் கட்டப்பட்டது. மாணவர்கள், இளைஞர்கள் வந்து, புத்தகம் படித்து பயனடைந்தனர்.

இந்நிலையில், நுாலகம் அருகே இருந்த ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமானதால், 10 ஆண்டுகளுக்கு முன், நுாலக கட்டடத்திற்கு ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது வரை இயங்கி வருகிறது.

இதனால், நுாலகம் பயன்பாடின்றி போனது. நுாலக புத்தகங்கள் மாயமாகிவிட்டன. ஊராட்சி அலுவலக பழைய கட்டடம் இடித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், புதிய கட்டடம் இதுவரை கட்டப்படவில்லை.

ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டி, நுாலகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, மாம்பாக்கம் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X