கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு

Added : நவ 24, 2022 | |
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தெற்கு ரயில்வே ஏ.டி.ஆர்.எம்., தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.விழுப்புரம் ரயில் நிலையம் தமிழகத்தின் வட, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக உள்ளது. பழமையான ரயில் நிலையம் மேம்படுத்தப்படாமல் உள்ளது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி



விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தெற்கு ரயில்வே ஏ.டி.ஆர்.எம்., தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரம் ரயில் நிலையம் தமிழகத்தின் வட, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக உள்ளது. பழமையான ரயில் நிலையம் மேம்படுத்தப்படாமல் உள்ளது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இதனையடுத்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட கூடுதல் மேலாளர் ராமலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், விழுப்புரம் ரயில் நிலையத்தில் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ரயில் நிலைய வாயில் பகுதி, டிக்கெட் கவுண்ட்டர்கள், நடைமேடைகள், பிளாட்பாரங்கள் போன்ற இடங்களை பார்வையிட்டு தேவையான மேம்பாட்டுப் பணிகள் செய்வது குறித்து ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதில், நுழைவு வாயில் பகுதியில் பெயர் பலகை வைப்பது. ரயில் நிலையம் உள்ளே செல்லும் வழி, வெளியே செல்லும் வழி என வசதிகளை ஏற்படுத்துவது.

பிளாட்பாரங்களில் ரயில் பெட்டிகள் நிற்கும் விபரங்களை அறிவிக்கும் மின்னணு டிஸ்ப்ளே அமைப்பது. 4 மற்றும் 5வது பிளாட்பாரங்களில் பயணிகள் நிற்பதற்கான மேற்கூரை அமைப்பது.

ரயில் நிலையத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துக்கான சாலை அமைப்பது. மூடப்பட்டுள்ள பயணிகள் நடைபாதை மேம்பாலம் சேதமடைந்துள்ளதால் அதனை இடித்து அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். விரைவில் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் தயாரித்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X